இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட 3 மணி நேரத்திலேயே பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது. எல்லையில் லட்சக்கணக்கான வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் உட்பட அனைத்து எல்லைக் கோடுகளிலும் இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் துப்பாக்கிகளை வைத்திருக்கிறார்கள். ராணுவ வீரர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன, திருமணத்திற்கு அடுத்த நாளே வீரர்கள் போர்க்களத்திற்குத் திரும்புவதைக் காண முடிந்தது.

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லையில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது பிஎஸ்எஃப் துணை ஆய்வாளர் முகமது இம்தியாஸ் வீரமரணம் அடைந்தார் . ஜம்முவில் உள்ள எல்லைப்புற தலைமையகத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்படும் என்றும், அவரது தியாகத்திற்கு பிஎஸ்எஃப் வீர வணக்கம் செலுத்துவதாகவும் இரங்கல் தெரிவித்துள்ளது.

ஜம்மு எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகாரப்பூர்வ x ஹேண்டில், "ஜம்மு மாவட்டத்தின் ஆர்.எஸ். புரா செக்டரில் உள்ள சர்வதேச எல்லையில் எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூட்டின் போது, தேச சேவையில் பிஎஸ்எஃப்-ஐச் சேர்ந்த துணிச்சலான சப் இன்ஸ்பெக்டர் முகமது இம்தியாஸ் செய்த உச்சபட்ச தியாகத்திற்கு நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம்" என்று எழுதியது.

இதையும் படிங்க: இந்தியாவின் கட் அண்ட் கறாரான 3 கன்டிஷன்கள்... விழி பிதுங்கி நிற்கும் பாகிஸ்தான்...!
"பி.எஸ்.எஃப் எல்லை புறக்காவல் நிலையத்தை வழிநடத்தும் போது, சப் இன்ஸ்பெக்டர் முகமது இம்தியாஸ் முன்னணியில் இருந்து துணிச்சலுடன் தலைமை தாங்கினார். பி.எஸ்.எஃப் டி.ஜி மற்றும் அனைத்து அணிகளும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். ஜம்முவின் பலூராவில் உள்ள எல்லைப்புற தலைமையகத்தில் நாளை முழு மரியாதையுடன் மலர்வளையம் வைக்கும் விழா நடைபெறும்" என்று அந்த பதிவில் மேலும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ப்ளீஸ் நிறுத்துங்க... அடிக்கிற அடி தாங்க முடியல... இந்தியாவிடம் கதறும் பாகிஸ்தான்...!