காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குழந்தைகள் மற்றும் பெண்களைத் தவிர்த்துவிட்டு ஆண்களைக் குறிவைத்துத் தாக்கியுள்ளனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, பாகிஸ்தானுடனனா சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

பாகிஸ்தானியர்கள், இந்தியாவை விட்டு 48 மணிநேரத்தில் வெளியேற கெடு விதிக்கப்பட்டது, வாகா, அட்டாரி எல்லைகள் மூடப்பட்டன, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. மேலும் சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு நீர் திறந்துவிடப்படுவது நிறுத்தப்பட்டது. மேலும் பஹல்காம் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளும் அவர்களை ஆட்டுவிப்பவர்களும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் வேட்டையாடப்படுவார்கள் என்றும், கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி சபதம் செய்துள்ளார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானியர்கள் தொடர்ந்து இந்தியாவில் தங்கலாமா..? மத்திய அரசு கூறும் விளக்கம் என்ன?

இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் 2 ஆவது கூட்டம் பிரதமர் இல்லத்தில் இன்று நடைபெற்றது. பாதுகாப்புக்கான அமைச்சர்கள் குழு கூட்டம் நடந்து முடிந்த நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி RAW உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் அலோக் ஜோஷி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவாக தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு செயல்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய உளவு அமைப்பான RAW-வின் முன்னாள் தலைவராக பதவி வகித்தவர் அலோக் ஜோஷி. ஆலோசனை குழு உறுப்பினர்களாக முன்னாள் விமானப்படை, தரைப்படை, கடற்படை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: PoK-வை கைப்பற்ற இந்தியா திட்டம்? அடுத்தக்கட்ட நடவடிக்கையால் பாக். அதிர்ச்சி!!