மேகாலயா, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று, அதன் இயற்கை அழகு, மலைப்பாங்கான நிலப்பரப்பு, மற்றும் கனிம வளங்களுக்கு பெயர் பெற்றது. இம்மாநிலத்தில் நிலக்கரி வளங்கள் மிகுதியாக காணப்படுகின்றன.
மேலும் நிலக்கரி சுரங்கங்கள் பல தனியார் நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. இருப்பினும், இத்தகைய சுரங்கங்களில் நடைபெறும் முறைகேடுகள், ஒழுங்கற்ற மேலாண்மை, மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து அவ்வப்போது பேசப்பட்டு வருகிறது.
மேகாலயாவில் 4000 கிலோ நிலக்கரி காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம், சுரங்கத் துறையில் நிலவும் ஒழுங்கீனங்களையும், முறைகேடுகளையும் மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. மேகாலயாவின் காரோ மலைப்பகுதியில் உள்ள ஒரு சுரங்கத்தில் இருந்து இந்த அளவு நிலக்கரி மாயமாகியுள்ளது.
இதையும் படிங்க: முதல்வருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டது.. அவர் இப்போது நலமுடன் இருக்கார்.. அமைச்சர் துரைமுருகன் தகவல்..!!
மேகாலயாவில் உள்ள பல சுரங்கங்கள் தனியார் நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. மேலும் இவற்றில் முறையான கணக்கு வைப்பு மற்றும் கண்காணிப்பு இல்லை.
இதனால், உற்பத்தி செய்யப்பட்ட நிலக்கரியின் அளவு, அதன் போக்குவரத்து மற்றும் விற்பனை குறித்த தகவல்கள் பதிவு செய்யப்படுவதில்லை என சொல்லப்படுகிறது. இத்தகைய குறைபாடுகள், நிலக்கரி திருட்டு அல்லது முறைகேடுகளுக்கு வழிவகுக்கின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் ராஜாஜு மற்றும் தியங்கன் கிராமங்களில் உள்ள இரண்டு நிலக்கரி சேமிப்பு மையங்களில் இருந்து கிட்டத்தட்ட 4,000 டன் நிலக்கரி காணாமல் போனதாக எழுத குற்றச்சாட்டு குறித்து ஆளும் பாஜக- என்பிபி கூட்டணி அமைச்சர் கீர்மென் ஷில்லா வினோதமான விளக்கத்தை அளித்துள்ளார்.
கனமழை மற்றும் வெள்ளத்தால் நிலக்கரி அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என்றும் ஜெயின்டியா மலைகளில் இருந்து வங்கதேசத்திற்குள் தண்ணீர் பாய்வதாகவும் நிலக்கரி சேமிக்கப்பட்ட கிராமங்களில் வெள்ளம் பாய்ந்து வங்கதேசத்திற்குள் சென்று இருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
நிலக்கரி திருட்டு குறித்து இதுவரை எந்தவிதமான ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வுக்கு வாய்ப்பே இல்லை.. உறுதியாக சொன்ன அமைச்சர் சிவசங்கர்..!!