ஒடிசாவின் பாலசோர் நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். பேராசிரியரின் தகாத நடவடிக்கை குறித்து கல்லூரி புகார் குழுவிடம் கடந்த ஜூலை ஒன்றாம் தேதி அந்த மாணவி புகார் கொடுத்துள்ளார். இருப்பினும் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்க பேராசிரியர் சமீர் குமார் சாஹூ ஏற்க மறுத்ததாக தெரிகிறது.
இதனை எடுத்து ஒரு வாரத்திற்குள் இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கடந்த 12ஆம் தேதி பாதிக்கப்பட்ட மாணவயுடன் சேர்ந்து கல்லூரிக்குள் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் திடீரென கல்லூரி முதல்வர் அலுவலகம் அருகே மாணவி, தான் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாணவி புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், 95% தீக்காயங்களுடன் வென்டிலேட்டர் உதவியோடு மாணவி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பீகார் தேர்தலிலும் மேட்ச் பிக்சிங்..? தேர்தல் ஆணையத்தை தாளிக்கும் ராகுல்காந்தி..!
மேலும், அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறினர். இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக ஒடிசா காவல்துறை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த நிலையில், தீக்குளித்த 22 வயது கல்லூரி மாணவி, 3 நாட்களாக உயிருக்கு போராடிய நிலையில், உயிரிழந்தார்.

இதனிடையே, புகாரை வாபஸ் பெறும் படி, கல்லூரியின் முதல்வரும், புகார்கள் குழு உறுப்பினர்களும் அழுத்தம் கொடுத்ததாக மாணவியின் தந்தை குற்றம் சாட்டினார். மேலும் புகாரை வாபஸ் பெறவில்லை என்றால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என்றும் கைது செய்யப்படுவீர்கள் என்றும் மிரட்டல் விடுத்ததாகவும் கூறினார். இதனை தொடர்ந்து, கல்லூரியின் துறைத் தலைவர் மற்றும் முதல்வர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவி அளித்த பாலியல் புகார் மீது உரிய விசாரணை நடத்தப்படவில்லை என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில், "ஒடிசாவில் நீதிக்காக போராடிய மகளின் மரணம், பாஜக அமைப்பால் செய்யப்பட்ட கொலையே தவிர வேறொன்றும் இல்லை.
தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தலை துணிச்சலாக பேசினார் அந்த மாணவி. ஆனால் நீதி வழங்கப்படவில்லை. மாறாக அச்சுறுத்தப்பட்டார். துன்புறுத்தப்பட்டார். மீண்டும் மீண்டும் அவமானப்படுத்தப்பட்டார். அவளை பாதுகாக்க வேண்டியவர்களே அவளை சுக்குநூறாக உடைத்தார்கள் இது தற்கொலை அல்ல.
இது அமைப்பின் திட்டமிட்ட படுகொலை. மோடி ஜி, ஒடிசாவாக இருந்தாலும் சரி, மணிப்பூராக இருந்தாலும் சரி... நாட்டின் மகள்கள் எரிந்து, உடைந்து, இறந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அமைதியாகவே இருக்கிறீர்கள். நாட்டிற்கு உங்கள் மௌனம் தேவையில்லை. பதில்தான் தேவை. இந்தியாவின் மகள்களுக்கு பாதுகாப்பும் நீதியும் தேவை" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மகனைப் போலவே சுட்டுக் கொல்லப்பட்ட தொழிபதிபர்.. பீகாரில் தலைதூக்கும் துப்பாக்கி கலாச்சாரம்! ராகுல் ஆவேசம்