பீகார், இந்திய அரசியலில் சமூக நீதி மற்றும் பொது உடமை அரசியலின் முக்கிய மையமாக விளங்குகிறது. இந்த மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்தக் குற்றச்சாட்டு, தேர்தல் ஆணையத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயத்தன்மை குறித்து கடுமையான விமர்சனங்களை எழுப்பியது.
இதற்கு பதிலளிக்கும் வகையில், காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் இணைந்து, வாக்காளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், தேர்தல் செயல்முறையில் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்தன. இந்த நிகழ்வு, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், தேர்தல் ஆணையத்தின் மீது அழுத்தம் கொடுக்கவும் ஒரு அரசியல் உத்தியாக அமைந்தது.இந்தக் கூட்டத்தில், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி போன்ற கட்சிகள், இந்த நீக்கங்கள் திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இலக்காகக் கொண்டு செய்யப்பட்டவை என்று குற்றம்சாட்டின. இதற்கு ஆதாரமாக, பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தங்களை மேற்கொள்ளும் முன் பொதுமக்களுக்கு தகவல் வழங்கப்படவில்லை என்றும், நீக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இதையும் படிங்க: ஆப்கான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 800ஆக உயர்வு..! பிரதமர் மோடி இரங்கல்..!!
பீகாரில் காங்கிரஸ் மற்றும் ஆர் ஜே டி கட்சிகள் இணைந்து வாக்காளர் உரிமை கூட்டத்தில் தனது தாயை அவமதித்துவிட்டதாக பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். இறந்த தனது தாயை அவமதிப்பு செய்து விட்டதாகவும், நாட்டில் உள்ள ஒவ்வொரு தாய்மார்களையும் அவமதித்து உள்ளதாகவும் கூறினார். தனது தாயாருக்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில் அவமதிப்பு செய்யப்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எங்களோடது எப்படிப்பட்ட கூட்டணி தெரியுமா? மோடி வெள்ளை அறிக்கை விடட்டும்! விளாசிய செல்வப்பெருந்தகை..!