வங்கக்கடலில் உருவான மோந்தா புயல் தீவிர புயலாக உருமாறி ஆந்திர மாநிலத்தின் மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே நரசிபுரா என்ற ஊரின் அருகே கரையை கடந்திருக்கிறது. இந்த நிலையில் கரையை கடந்த பின்பும் புயல் சின்னத்துடைய பின்பகுதி முழுமையாக கடந்து முடிக்க ஒன்றிலிருந்து இரடு மணி நேரம் ஆகும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டிருந்தது. சரியாக நள்ளிரவு 12:30 மணி அளவில் மோந்தா புயலானது நரசிபுரா அருகே கரையை கடந்த நிலையில் இரண்டரை மணி அளவில் முழுவதுமாக அது கரையை கடந்தது.
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக கடலோர பகுதியை ஒட்டிருக்கக்கூடிய ஏழு மாவட்டங்களில் இதனால் பெரும் மழை என்பதை தாண்டி சூறாவளி காற்றுடன் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்திருக்கிறது. இதனால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்த சம்பவம் அரங்கேறி, அங்கு மீட்பு பணிகளும் முடுக்கி விடப்பட்டன.
புயல் கரையை கடந்து செல்வதால் ஆந்திர மாநிலத்தின் வடப்பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் கனமழை முதல் அதிகன மழை பெய்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி மோந்தா புயல் கரையை கடந்தது. இதனால் நாளை முதல் சீதோஷ்ண நிலைதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் மாறும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. நாளை கூட வட ஆந்திரா மற்றும் தெலங்கானா உள்ளிட்ட பகுதிகளிலில் மழை இன்னும் கூடுதலாக பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: புரட்டிப்போடும் 'மோந்தா' புயல்..!! ஆந்திராவில் இருந்து சென்னை வரும் விமானங்கள் ரத்து..!!
தற்போதைய சூழலில் ஒரு மிகப்பெரிய பிரளயத்தை போல 100 கிலோ மீட்டர் முதல் 110 கிலோம் மீட்டர் வரையிலான வேகத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் வீசியபடி இந்த புயலானது கரையை கடந்திருக்கிறது. மோந்தா புயல் ஆந்திர மாநிலத்தை உலுக்கி போட்டிருக்கிறது என்றே சொல்லலாம். பெருமழையும் சூறாவளி காற்றுடன் கரையை கடந்திருக்கிறது. வட ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தற்பொழுது மழையானது தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிற நிலையில், தற்போது மோந்தா புயலானது வலுவழந்துள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
அதிகாலை 2 மணியளவில் மோந்தா புயல் கரையைக் கடந்துள்ளது. கடுமையான சூறாவளி புயல் "மோந்தா" புதன்கிழமை கடலோர ஆந்திரப் பிரதேசத்தில் சூறாவளி புயலாக வலுவிழந்தது."இது ஆந்திராவின் கடலோரப் பகுதியில் கிட்டத்தட்ட வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 6 மணி நேரத்தில் அதன் தீவிர சூறாவளி புயலைத் தக்க வைத்துக் கொள்ளும், மேலும் அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் பலவீனமடையும்" என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஆந்திராவை நெருங்கும் ஆபத்து... பேயாட்டம் போடும் மோந்தா புயல்... 70 ரயில்கள் ரத்து...!