செஞ்சியில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுகவினர் இடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அதிமுக பாஜகவனுடைய ஒரு கிளை. தலைமை அலுவலகம் டெல்லியில் தான் உள்ளது, கிளை அலுவலகம் சென்னையில் உள்ளது. அதிமுக என்பதைவிட அமித்ஷா முன்னேற்ற கழகம் என்று வைத்திருக்கலாம் என்றார்.
எஸ் ஐ ஆர் ஐ அதிமுக ஆதரிக்கிறது, எஸ்.ஐ.ஆர் ல் என்ன பிரச்சினை உள்ளது என்பது குறித்து ஒரு மாதம் தான் அவர்கள் புரிகிறது. அமித்ஷாவை கேட்காமல் எடப்பாடியால் மூச்சு கூட விட முடியவில்லை என கேலி செய்தார். திமுகவில் உட்கட்சி பிரச்சனை என்றால் மாவட்ட செயலாளரையோ அல்லது கட்சி தலைமையோ பார்த்து தீர்த்துக் கொள்வார்கள் ஆனால் அதிமுகவில் பிரச்சனை என்றால் மறைமுகமாக சென்று அமித்ஷாவை சந்தித்து தீர்வு காணுகின்றனர். செங்கோட்டையன் ஹரித்துவருக்கு ஆன்மீகப் பயணம் போறேன் என்று சொல்லிவிட்டு அமித்ஷாவை சந்தித்து விட்டு அவர் கட்டளைக்கிணங்க இன்று வேறு ஒரு இயக்கத்தில் சேர்ந்து உள்ளார். தற்போது ஓபிஎஸ் டெல்லி சென்று வந்துள்ளார் என்ன நடக்கப்போவது என்பது பின்னர் தான் தெரியவரும்.
தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருப்பதை பொருக்க முடியாத ஒன்றிய பாஜக அரசு மற்றும் அவற்றின் அடிமைகள் தமிழகத்திற்கு ஏதாவது தொந்தரவு தரவேண்டும் எப்படியாவது பழி தீர்க்க வேண்டுமென செயல்பட்டு கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டினார். தமிழக மக்களை எப்பாடியாவது பழிதீர்க்க வேண்டும் என புதிய கல்வி கொள்கையை கொண்டு வருகிறார்கள் அப்படி அதனை ஏற்றுக்கொண்டால் மீண்டும் தமிழகத்தில் இந்தி வந்துவிடும், மற்ற மாநிலங்கள் எல்லாம் புதிய கல்வி கொள்கையை ஏற்று கொள்கிறது தமிழகம் மட்டும் ஏற்கவில்லை என்பதால் 2500 கோடியை நிதியை ஒன்றிய அரசு கொடுக்கவில்லை.
இதையும் படிங்க: ஜெ.வின் 9ம் ஆண்டு நினைவு நாள்..!! இது நடந்தே தீரும்..!! நினைவிடத்தில் சபதம் எடுத்த இபிஎஸ்..!!
தமிழ்நாட்டிற்கு மட்டும் புதிய கல்வி கொள்கையை ஏற்று கொண்டால் தான் நிதியை வழங்குவேன் என ஒன்றிய அமைச்சர் தெரிவிக்கிறார். புதிய கல்வி கொள்கை மூலம் சமஸ்கிருதம், இந்தியை குறுக்கு வழியில் கொண்டு முயற்சிக்கிறார்கள் 2500 கோடி அல்ல பத்தாயிரம் கோடி கொடுத்தாலும் புதிய கல்வி கொள்கையை கொண்டு வரமாட்டோம் என தமிழக முதலமைச்சர் தெரிவிக்கிறார். தமிழகத்தை பின் தொடர்ந்து மற்ற மாநில முதலமைச்சர்களும் புதிய கல்வி கொள்கையை எதிர்க்க நினைப்பதாகவும் ஒன்றிய அரசு விஷயத்தில் மற்ற மாநில முதலமைச்சர்களும் தமிழக முதலமைச்சரை உற்று நோக்குவதாக உதய நிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
இன்று இந்தியாவிலேயே தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முதன் மாநிலமாக திகழ்கிறது. இந்திய அளவில் உயர் கல்வியில் 41% தமிழகத்தில் தான் உள்ளனர், இந்தியாவிலேயே உயர் கல்வியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திட்டத்தை தெலுங்கானா முதல்வர் ரேவேந்தர் ரெட்டி பாராட்டிவிட்டு அந்த மாநிலத்திலும் திட்டத்தை நடைமுறைப்படுத்த ப்படும் என்று தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி பதவிக்கு வந்தார். அந்த கட்சியினுடைய தலைவராக அமித்ஷா தான் உள்ளார்.
ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாடு அரசுக்கு எப்படியாவது ஒரு வழியில் தொந்தரவு கொடுக்கணும் தமிழக மக்களை எப்படியாவது பழித்தீர்க்க வேண்டும் என்றும் இந்தியை திணிக்க வேண்டும் என்று முயற்ச்சிக்கின்றனர். எடப்பாடி பழனிச்சாமி வேளாண் திட்டங்களை ஆதரித்து விவசாயிகளுக்கு துரோகம் செய்தார் நானும் விவசாயி விவசாயி என்று சொல்லி விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டு ஏமாற்றி வருகிறார் என்று குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: அமித் ஷா காலில் முதலில் விழுவது யார்? ... இபிஎஸ், ஓபிஎஸை பங்கமாய் கலாய்த்த உதயநிதி...!