ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, நாட்டு மக்கள் கடும்ோபத்தில் உள்ளனர். பயங்கரவாதத்திற்கு எதிரான உத்தியை அரசு முன்னெடுத்து வருகிறது. நாடு முழுவதும் போராட்டங்கள் காணப்படுகின்றன. பாகிஸ்தானுக்கு எதிராக நிறைய முழக்கங்களும் எழுந்து வருகின்றன. இந்நிலையில் தினேஷ் ஃபலாஹரி மகாராஜ் பயங்கரவாதத்தை அழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியுள்ளார். பாகிஸ்தானை கண்டிக்கக்கோரி அவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு இரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளார்.

அயோத்தி ராமர் கோயில்- மசூதி வழக்கில் முக்கிய தரப்பினரான தினேஷ் ஃபலாஹரி மகாராஜ், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு தனது இரத்தத்தால் கடிதம் எழுதியுள்ளார். அதில், '' பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும். பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் குகையாக மாறிவிட்டது. பாகிஸ்தானில் நூற்றுக்கணக்கான பயங்கரவாத முகாம்கள் உள்ளன. பாகிஸ்தானுக்குள் நுழைந்து பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை நீங்கள் கொன்றீர்கள். உங்கள் சிறந்த நண்பர் மோடி ஜியும் பாகிஸ்தானுக்குள் நுழைந்து பயங்கரவாதிகளைத் தாக்கினார்.
இதையும் படிங்க: இந்தியப் பொருட்களுக்கு வரி விதித்த ட்ரம்ப்.. மெளன விரதத்தில் மோடி.. வெளுத்து வாங்கும் எதிர்க்கட்சி.!!

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உலகம் முழுவதும் அப்பாவி மக்களைக் கொல்வதன் மூலம் பயங்கரவாத சம்பவங்களை நடத்தி வருகின்றன. பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிப்பதில் நீங்கள் ஒத்துழைத்தால், உலகம் முழுவதும் பயங்கரவாத சம்பவங்கள் முடிவுக்கு வரும். பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கிறது. டொனால்ட் டிரம்ப் , நீங்கள் பயங்கரவாதிகளுக்கு எதிரானவர். உலகம் முழுவதும் உங்களைப் பார்க்கிறது.

இது மட்டுமல்ல, உலகம் முழுவதும் அமைதியை நீங்கள் விரும்பினால், பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டியது அவசியம். டொனால்ட் டிரம்ப் ஜி, நீங்களும் உலகின் விருப்பமான தலைவர் மோடி ஜியும் எப்போதும் உலக அமைதியை மீட்டெடுக்க நிறைய வேலை செய்துள்ளீர்கள். பாகிஸ்தான் பயங்கரவாத நாடாக அறிவிக்கப்பட்டால், வெளிநாட்டிலிருந்து பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி நிறுத்தப்படும்'' என அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார் தினேஷ் பலாஹரி மகாராஜ்.
முன்னதாக, மதுரா கோவிலில் இருந்து மசூதி அகற்றப்படும் வரை, உணவு சாப்பிட மாட்டேன் என்றும், காலில் காலணி அணிய மாட்டேன் என்றும் தினேஷ் பலாஹரி மகாராஜ் உறுதிமொழி எடுத்திருந்தார். தினேஷ் பலாஹரி மகாராஜ் உறுதிமொழி எடுத்து 3 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. அவர் இன்னும் தனது உறுதிமொழியில் உறுதியாக இருக்கிறார்.
இதையும் படிங்க: சத்து மாத்திரையில் ஸ்டாப்ளர் பின்.. முதல்வர் தனி பிரிவுக்கு பாய்ந்த புகார்..!