வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

களைகட்டும் தி.மலை… முதல்வர் பங்கேற்கும் திமுக இளைஞரணி சந்திப்பு…!

திமுக வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு இன்று திருவண்ணாமலையில் நடைபெறுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று நடைபெறவிருக்கும் திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு, கட்சியின் இளம் தலைமுறையை ஒருங்கிணைத்து வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமையவுள்ளது. திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கட்சியின் இளைஞரணியை மேலும் பலமாக்கும் நோக்கில் இத்தகைய மண்டல அளவிலான சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதன் முதற்கட்டமாக வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு திருவண்ணாமலையில் நடைபெறுகிறது.இந்நிகழ்வு திருவண்ணாமலை கலைஞர் திடலில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த 29 கழக மாவட்டங்கள் மற்றும் 91 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் இருந்து சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர்.

திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இந்நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்துகிறார்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட கட்சியின் முக்கியத் தலைவர்கள் சிறப்புரையாற்றவுள்ளனர். திமுக இளைஞரணி 1980-ஆம் ஆண்டு மு.க. ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்டு, கட்சியின் முதுகெலும்பாக விளங்கி வருகிறது.

இதையும் படிங்க: நான் எந்த தவறும் செய்யல… ரூ.1020 கோடி ஊழல் குற்றச்சாட்டை திட்டவட்டமாக இருக்கும் கே.என். நேரு…!

தற்போது மாநிலம் முழுவதும் 5 லட்சம் நிர்வாகிகளும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய இளைஞர் அரசியல் அமைப்புகளில் ஒன்றாக இது திகழ்கிறது. இச்சந்திப்பு 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இளைஞர்களை திரட்டி, திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் அமைப்பதற்கான அடித்தளமாக அமையும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: ரூ.1020 கோடி ஊழல்… கே. என். நேருவை விடாதீங்க… அதிமுக லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी