கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நாகையில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனக்கு மக்களை சந்திக்க திமுக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை கட்டவிழ்த்து விடுவதாகவும், அடக்குமுறையைக் கையாள்வதாகவும் கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
“ஒரு உதாரணத்திற்கு கேட்கிறேன்.. ஆர்.எஸ்.எஸ் தலைவர் இங்க வருகிறார் என்று எடுத்துக்கோங்க.. நம் நாட்டின் பிரதமர் மோடி இங்கே வருவார் என்று வச்சுக்கோங்க.. ஒரு மத்திய அமைச்சர் வருகிறார்கள்.. மத்திய உள்துறை அமைச்சர் வருகிறார் என்று வைத்துகொள்ளுங்கள். அப்போது நீங்க இந்த மாதிரி கண்டிஷன்கள் எல்லாம் போடுவீங்க.. இந்த மாதிரி பவர் கட் பண்ணுவீங்க.. இந்த மாதிரி ஒயர் கட் பண்ணுவீங்க” என சரமாரியாக விமர்சித்திருந்தார்.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், விஜய்யைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வீட்டின் கூரைகள், சுற்றுச்சுவர்கள், மின் கம்பங்களில் எல்லாம் ஏறி நின்று கொள்கிறார்கள். இதனால் மின்சாரம் தாக்கி அசம்பாவிதம் நடக்காமல் இருக்கவே விஜய் பேசும் இடத்தை சுற்றிலும் மின் தடை செய்யப்படுகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தவெக நிர்வாகிகளும் கூட மின்வாரியத்திற்கு பவர் கட் செய்யச் சொல்லி மனு கொடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: என்ன தலை தவெக பக்கம் திரும்புது? விஜய் சொன்னது ரைட்... ஆதரித்த அண்ணாமலை...!
இதனையடுத்து விஜயின் பவர் கட் குற்றச்சாட்டிற்கு திமுக நிர்வாகி தமிழன் பிரசன்னா பதிலளித்துள்ளார். திமுக கூட்டம் ஒன்றில் பேசியுள்ள தமிழன் பிரசன்னா, “சரியா அந்த ஊருக்கு போறதுக்கு முன்னாடி, அந்த ஏரியாலயே பவர் கட். அப்புறம் திருச்சிக்கு போய் நான் பேச ஆரம்பிச்சதுக்கு அப்புறம் ஸ்பீக்கருக்கு போற வயர் கட் பண்ணிட்டாங்க என சொல்கிறார்கள். இங்கே எந்த கரண்ட் கம்பத்தையும் கட் பண்ண சொல்லல, எந்த போஸ்ட்லையும் யாரும் ஏறி நிக்கல, எந்த அணில் குஞ்சு கீழ விழுந்தாலும் நாங்க கவலைப்பட போறது இல்லை. ஏன்னா இங்கே உட்கார்ந்திருக்கிற கூட்டம் கருப்புச் சிவப்பை கொள்கை சிந்தனையோடு ஏற்று கொண்டிருக்கிற கூட்டம்” என தவெக தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அதுமட்டுமல்ல அரசியல்ல சில பேருக்கு நம ஓய்வும் கொடுக்கணும் இல்லையா?ன்னு சொல்லியிருக்காரு, நேற்று முளைத்த காலான் எல்லாம் திமுக என்கிற ஆலமரத்தை அழித்துவிடலாம் என மேடைக்கு மேடை பேசுறாங்க என தவெகவை கடுமையாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: அமித்ஷா பின்னணியில் விஜய்...கட்சி ஆரம்பிக்க சொன்னதே BJP தான்... அப்பாவு பரபரப்பு பேட்டி...!