இந்தியாவோட பாதுகாப்பு துறையில் இன்னொரு மைல்கல்! எதிரி நாடுகளோட ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் மின்னல் வேகத்துல இடைமறிச்சு தகர்க்கும் ஒரு சூப்பர் வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியா உருவாக்கியிருக்கு. இதோட முதல் சோதனை ஒடிசா கடற்கரையில் ஆகஸ்ட் 23, 2025-ல வெற்றிகரமா நடந்திருக்கு. இந்த ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு (IADWS) ‘சுதர்சன சக்ரா’னு பெயர் வைக்கப்பட்டிருக்கு.
போர்னு வந்தா, எதிரி நாடு நம்ம மேல ஏவுகணைகளையோ, ட்ரோன்களையோ வீசினா, அதை இடைமறிச்சு அழிக்கிறது ரொம்ப முக்கியம். இல்லேன்னா, நம்ம நாட்டு மக்களோட பாதுகாப்புக்கு ஆப்பு வைக்கும். இதுக்கு சக்தி வாய்ஞ்ச வான் பாதுகாப்பு அமைப்பு தேவை. இஸ்ரேல், ஈரான், ஹமாஸ், ஹெஸ்புல்லா மாதிரியானவங்க வீசின ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் அவங்களோட அயர்ன் டோம், டேவிட் ஸ்லிங் மாதிரியான அமைப்புகள் மூலமா தடுத்து அழிச்சது நமக்கு உதாரணம்.
இதே மாதிரி, மே மாசம் பாகிஸ்தான் நம்ம மேல ட்ரோன்களையும், ஏவுகணைகளையும் ஏவினப்போ, இந்தியாவோட எஸ்-400, ஆகாஷ் மிஸைல் சிஸ்டம்ஸ் எல்லாம் சேர்ந்து அதை முறியடிச்சது. ஆனா, எஸ்-400 ரஷ்யாவுல இருந்து வாங்கினது. இப்போ, நம்ம பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பான டிஆர்டிஓ (DRDO) முழுக்க முழுக்க உள்நாட்டுல உருவாக்கின ஒரு புது அமைப்பு தான் இந்த IADWS.
இதையும் படிங்க: அடுத்த துணை ஜனாதிபதி யார்? வேட்பாளர் தேர்வில் மோடி மும்முரம்!! பாஜ மூத்த தலைவருக்கு பதவி!!
இந்த ‘சுதர்சன சக்ரா’ அமைப்புல மூணு முக்கிய ஆயுதங்கள் இருக்கு. முதல்ல, Quick Reaction Surface-to-Air Missile (QRSAM) – இது மின்னல் வேகத்துல எதிரியோட பீரங்கிகளையும், ஏவுகணைகளையும் இடைமறிச்சு அழிக்கும். அடுத்து, Very Short Range Air Defence System (VSHORADS) – எல்லைக்கு பக்கத்துல வர்ற எதிரி ட்ரோன்களையும், ஏவுகணைகளையும் நொறுக்கும்.
மூணாவதா, High-Power Laser-Based Directed Energy Weapon (DEW) – இது லேசர் கதிர்களை வீசி, எதிரியோட ராக்கெட்கள், ட்ரோன்களை தகர்க்கும். இந்த மூணு அடுக்கு பாதுகாப்பும் ஒரு சென்ட்ரல் கமாண்ட் அண்ட் கண்ட்ரோல் சென்டர் மூலமா கட்டுப்படுத்தப்படுது. ஒடிசாவுல நடந்த சோதனையில், ரெண்டு உயர வேக UAV-களும், ஒரு மல்டி-காப்டர் ட்ரோனும் ஒரே நேரத்துல இந்த மூணு ஆயுதங்களாலயும் வெவ்வேறு தூரத்துலயும் உயரத்துலயும் அழிக்கப்பட்டன. எல்லாம் கச்சிதமா வேலை செஞ்சது!

இந்த சோதனை வெற்றிக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், டிஆர்டிஓவையும், இந்திய ராணுவத்தையும், தொழில்துறையையும் பாராட்டியிருக்கார். “இந்த தனித்துவமான சோதனை, நம்ம நாட்டோட பல அடுக்கு வான் பாதுகாப்பு திறனை உறுதி செஞ்சிருக்கு. எதிரியோட வான்வழி தாக்குதல்களுக்கு எதிரா முக்கியமான இடங்களை பாதுகாக்க இது உதவும்”னு அவர் சொல்லியிருக்கார்.
இந்த சோதனை, மே மாசம் நடந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’க்கு பிறகு, பாகிஸ்தானுக்கு எதிரான நம்ம பாதுகாப்பை இன்னும் வலுப்படுத்துது. அப்போ, பாகிஸ்தான் அனுப்பின 50-க்கும் மேற்பட்ட ட்ரோன்களையும், PL-15 ஏவுகணைகளையும் நம்ம ஆகாஷ், எஸ்-400 சிஸ்டம்ஸ் தகர்த்தது. இப்போ இந்த புது IADWS, 2026-க்குள் முழுமையா தயாராகி, பாகிஸ்தான், சீனா மாதிரியான எதிரிகளுக்கு சவால் விடும்.
பிரதமர் மோடி, “அடுத்த 10 வருஷத்துல இந்த சுதர்சன சக்ரா முழுமையா தயாராகி, இந்தியாவோட வான் பாதுகாப்பை அசைக்க முடியாத கோட்டையா மாற்றும்”னு சொல்லியிருக்கார். இது இந்தியாவோட ஆத்மநிர்பர் பாரத் முயற்சிக்கு ஒரு பெரிய வெற்றி. இனி பாகிஸ்தான் ஏவுகணைகளோ, ட்ரோன்களோ அனுப்பினா, நம்ம ‘சுதர்சன சக்ரா’ அவங்களை கதறவிடும்!
இதையும் படிங்க: ஆபரேஷன் சிந்தூர்ல என்னதான் நடந்துச்சு!! காங்கிரஸ் - பாஜக காரசார விவாதம்..!