தமிழ்நாடு முழுவதும் ஜூலை ஏழாம் தேதி முதல் அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணத்தை நடத்தி வருகிறார். இந்த சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளில் இருந்து இந்த சுற்றுப்பயணம் தொடங்கியது. ஜூலை 21 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல் கட்டம் முடிவடையும் என கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கி, மக்களைச் சந்தித்து, திமுக அரசின் தோல்விகளை அம்பலப்படுத்துவதும், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு எடுத்துரைப்பதும் இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் மக்களிடையே திமுக அரசு பற்றியும், அதிமுகவின் சாதனைகள் தொடர்பாகவும் விவரித்து வருகிறார். இந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி வரும் 24ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிச்சாமி தொடங்குகிறார்.

இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி ரோடு ஷோ நடத்தினார். அப்போது மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை பார்த்தது திமுக என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார். திமுகவினர் 16 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்திருக்கிறார்கள் என்றும் காங்கிரஸ், பாஜகவுடன் மீனவர்கள் மீது திமுகவுக்கு அக்கறை இல்லையா என்றும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: காமராஜர் மீதான களங்கம்... கருணாநிதி வகையறாவின் வன்மம்! நடிக்காதீங்க ஸ்டாலின்.. விளாசிய இபிஎஸ்..!
அப்போதெல்லாம் விட்டுவிட்டு, தற்போது கட்சி தீவை மீட்பதில் பாஜக அரசியல் செய்வதாக திமுக பொய் கூறி வருகிறது என்று தெரிவித்தார். வாஜ்பாய் அமைச்சரவையில் முரசொலி மாறன் போன்றோர் அமைச்சர்களாக இருந்ததை சுட்டிக்காட்டிய அவர், மத்திய அரசு மீது பழி போட்டு மீனவர்களின் வாக்குகளை பெற திமுக முயற்சிப்பதாக கூறினார்.
இதையும் படிங்க: இபிஎஸ் அணி, வேலுமணி அணி ... 2 துண்டாகும் அதிமுக... பகீர் கிளப்பும் ஆர்.எஸ்.பாரதி