தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடக்கிறதா என்று கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்தார். அப்போது தேர்தல் உத்தி, வியூகங்களை வெளியில் சொல்ல முடியாது என்ற கூறினார். பாவைக்காவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெறவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி மறுக்காதது அரசியல் பேசுபொருளாக மாறியிருக்கிறது. பிரம்மாண்ட கட்சி ஒன்று அதிமுக கூட்டணி வைக்க உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
தமிழக வெற்றி கழகத்தோடு கூட்டணிக்கு வந்தால் பாஜகவுடன் கூட்டணி முறிக்க அதிமுக தயாரா இன்று எடப்பாடி பழனிச்சாமியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது யூகத்தின் அடிப்படையிலான கேள்விக்கு பதில் அளிக்க முடியாது என்று தெரிவித்தார். மேலும் வலுவான கூட்டணி ஏன் அமையவில்லை என்பதற்கும் அவர் பதிலளித்தார். திமுகவின் அதிகார பலம் பண பலத்தை எதிர்த்து கூட்டணியை கட்டமைப்பது சுலபமல்ல என்றும் அனைத்து தடைகளையும் தாண்டி அதிமுக சிறப்பான கூட்டணி அமைக்கும் எனவும் தெரிவித்தார்.

பாஜக மற்றும் திமுகவோடு கூட்டணி இல்லை என்பதில் தமிழக வெற்றிக்கழகம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இந்த நிலையில் அதிமுக - தவெக இடையே கூட்டணி பேச்சு வார்த்தை நடப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. அதிமுகவோடு ஒருவேளை தமிழக வெற்றி கழகம் கூட்டணி வைத்தால் தங்கள் தலைமையில் கூட்டணி என்ற நிலையிலிருந்து இறங்கி வருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கூட்டணி அமைய வேண்டும் எனில் இறங்கி வரப்போவது யார் என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: தவெகவின் 2வது மாநில மாநாடு.. அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த மதுரை காவல்துறை..!
தமிழக வெற்றி கழகத்தில் முதலமைச்சர் வேட்பாளர் விஜய் தான் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்பது அனைவரும் அறிந்தது. அதிமுகவோடு ஒருவேளை தமிழக வெற்றி கழகம் கூட்டணி வைத்தால் தனது நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வருமா என்றும் முதலமைச்சர் வேட்பாளரை மாற்றிக் கொள்ளும் முன்வருவார்களா என்ற கேள்வியும் முன் வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நண்பா.. நண்பீஸ் இனி வரலாறு பேசும்..! தவெக 2வது மாநாடு அறிவிப்பை பகிர்ந்த விஜய்..!