வாக்காளர் பட்டியலில் விடுபட்ட தகுதியான வாக்காளர்களை மீண்டும் சேர்ப்பதற்காக சிறப்பு முகாம்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்க இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி நிறைவடைந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த சிறப்பு இயக்கம் நடைபெறும். விடுபட்ட வாக்காளர்கள் மட்டுமல்லாமல், புதிதாகத் தகுதி பெற்ற இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்களையும் பட்டியலில் சேர்ப்பதே இதன் நோக்கம்.
இந்த உத்தரவு தொடர் திருத்த நடைமுறையின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் பதிவு என்பது தொடர்ந்து பேசிய நடைபெறும் செயல்முறை என்பதால், சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்குப் பிறகும் தகுதியானவர்கள் விடுபடக்கூடாது என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகள், மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் வாக்காளர் பதிவு அதிகாரிகள் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தச் சிறப்பு இயக்கத்தின் முக்கிய அம்சமாக, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் முந்தைய வாக்காளர் பட்டியலைத் தற்போதைய பட்டியலுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அதில் முன்பு இருந்து இப்போது விடுபட்டவர்களின் பெயர்களைக் கண்டறிந்து, வீடு வீடாகச் சென்று அவர்களைச் சந்தித்து விசாரிக்க வேண்டும். அவர்கள் தகுதியுள்ளவர்களாக இருந்தால், உடனடியாகப் படிவம் 6 மூலம் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு வாக்குச்சாவடி அலுவலரும் வாரத்திற்கு குறைந்தது இருபது முதல் இருபத்தைந்து வாக்காளர்களைச் சரிபார்த்து, இந்தப் பணியை சுமார் ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "மூக்கணாங்கயிறு கட்டிய பசு மாடு போல"..! "மோடி, அமித் ஷாவிடம் சீரழியும் தேர்தல் ஆணையம்".! மனோ தங்கராஜ் விமர்சனம்..!!
வீடு வீடாகச் செல்லும் போது, விடுபட்டவர்கள் மட்டுமல்லாமல், முதல்முறை மற்றும் இளம் வாக்காளர்களையும் சேர்க்க உதவி செய்ய வேண்டும். கண்டறியப்பட்டவர்களின் தற்போதைய நிலையைப் பதிவு செய்து, படிவம் 6 நிரப்பப்பட்டவர்களைக் குறிப்பிடவும் அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தப் பட்டியல்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் பகிரப்பட்டு, விடுபட்ட தகுதியான வாக்காளர்களைச் சேர்க்க மேலும் வாய்ப்பு வழங்கப்படும்.
இதையும் படிங்க: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி நாளை முதல் நாடு தழுவிய போராட்டம்: சிஜேபி!