சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அப்போது உரையாற்றிய அவர், நாடாளுமன்ற தேர்தல் வேறு, சட்டமன்ற தேர்தல் வேறு என்று குறிப்பிட்டு பேசிய எடப்பாடி பழனிச்சாமி 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக சேர்ந்து பெற்ற வாக்குகள் சதவீதம் 41.33 என்று குறிப்பிட்டார். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக 210 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவித்தார். 2021 சட்டமன்ற தேர்தலில் கலைஞர் இருந்தபோதும் கூட எதிர்க்கட்சி வரிசையில் திமுகவுக்கு இடமில்லை என்று தெரிவித்தார்.
நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கூறி திமுக ஆட்சியைப் பிடித்துள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்தார். அதில் முக்கியமானது கல்விக்கடன் ரத்து என்ற வாக்குறுதி என குறிப்பிட்டு பேசினார். கேஸ் சிலிண்டர் மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, கல்விக்கடன் ரத்து என்னவானது என்று கேள்வி எழுப்பினார்.

அதிமுக ஆட்சியை கொண்டுவரப்பட்ட திட்டங்களை எல்லாம் நிறுத்தியது திமுக என்று குறிப்பிட்டார். அம்மா மினி கிளினிக், இரு சக்கர வாகனம் போன்ற திட்டங்களை திமுக அரசு நிறுத்தியதாக தெரிவித்தார். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பது கூட அதிமுகவின் அழுத்தத்ததால் தான் என்றும் கூறினார். வேறு வழியில்லாமல் இருபத்து எட்டு மாதங்கள் கழித்து மகளிருக்கு ஆயிரம் ரூபாய் திட்டம் தொடங்கப்பட்டதாகவும் விமர்சித்தார். சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு ஆயிரம் ரூபாய் மகளிருக்கு கொடுத்து வருவதாகவும் மக்கள் பணம் பெற்றுக் கொண்டாலும் அதிமுகவுக்கு தான் வாக்கு செலுத்துவார்கள் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள்... முழு விவரம்...!
மக்கள் செல்வாக்கை திமுக இழந்துவிட்டதாக கூறிய எடப்பாடி பழனிச்சாமி, 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதாக அறிவித்துள்ளதாகவும் மாணவர்களின் வாக்கை பெறுவதற்காக தான் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி இருப்பதாகவும் விமர்சித்தார். கல்லூரி திறக்கப்பட்டு ஐந்து மாதம் கழித்து தான் மடிக்கணினி வழங்கப்படுகிறது என்றும் இதனால் என்ன பயன் எனவும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: நீதிமன்ற உத்தரவிற்கே சவால்... திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுகவை கண்டித்து தீர்மானம்...!