அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate - ED) இந்தியாவில் பொருளாதார குற்றங்களைத் தடுப்பதற்காக மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு முக்கியமான புலனாய்வு மற்றும் சட்ட அமலாக்க அமைப்பாகும். இது முதன்மையாக பணமோசடி தடுப்புச் சட்டம் மற்றும் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் ஆகியவற்றை அமல்படுத்துவதற்கு பொறுப்பு வகிக்கிறது.
இந்த அமைப்பு 1956ஆம் ஆண்டு நிறுவப்பட்டது மற்றும் பணமோசடி, கருப்பு பண மாற்றம், அந்நிய செலாவணி மீறல்கள் மற்றும் தலைமறைவு பொருளாதார குற்றவாளிகளை கையாள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், சமீப காலங்களில் அமலாக்கத்துறை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அமலாக்கத்துறை மீதான மிக முக்கியமான குற்றச்சாட்டு, இது மத்திய அரசால் அரசியல் எதிரிகளை குறிவைக்கப் பயன்படுத்தப்படுகிறது என்பதாகும். பல எதிர்க்கட்சி தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் மீது அமலாக்கத்துறை விசாரணைகளை மேற்கொண்டுள்ளது, இது அரசியல் பழிவாங்கல் என்ற குற்றச்சாட்டுக்கு வழிவகுத்துள்ளது.
இதையும் படிங்க: #உங்களுடன் ஸ்டாலின்! உயர் நீதிமன்ற ஆணைக்கு இடைக்கால தடை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!

இந்த நிலையில், சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான வழக்குகளின் விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் அமலாக துறையை கண்டித்து உள்ளது. குரூர புத்தி கொண்டவரைப் போல அமலாக்கத்துறை செயல்படக்கூடாது என்றும் கூறியுள்ளது.
அமலாக்கத்துறை வழக்குகளில் தண்டனை விகிதம் என்பது 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது என்று கூறியுள்ளது. வஞ்சக எண்ணத்துடன் அமலாக்கத்துறை செயல்படக்கூடாது என்றும் சட்டத்திற்கு உட்பட்டே செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் காட்டமாக கூறியுள்ளது.
அமலாக்கத்துறை அதிகாரம் தொடர்பான சீராய்வு மனு விசாரணையின் போது, ஏற்கெனவே பல்வேறு தருணங்களில் அமலாக்கதுறையின் செயல்பாடு குறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அரசு திட்டங்களில் முதல்வர் பெயருக்கு தடை.. சுப்ரீம் கோர்ட்டுக்கு போன தமிழக அரசு..!!