அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம், உலகின் முன்னணி போர் தளவாட உற்பத்தி நிறுவனமா இருக்கு. இவங்க உருவாக்குற எப்-35பி ரக போர் விமானங்கள், ரேடாரில் பிடிபடாத ஸ்டெல்த் தொழில்நுட்பம், செங்குத்து தரையிறக்கம், குறுகிய ஓடுபாதையில் டேக்-ஆஃப் ஆகுற திறன் ஆகியவற்றோட உலகின் மிக விலை உயர்ந்த விமானமா பார்க்கப்படுது.
ஆனா, இந்த விமானங்கள் சமீப காலமா அடிக்கடி தொழில்நுட்ப கோளாறுகளை சந்திச்சு, பல நாடுகளை யோசிக்க வைச்சிருக்கு. குறிப்பா, இந்தியாவுலயும் ஜப்பானுலயும் இந்த விமானங்கள் அவசரமா தரையிறக்கப்பட்ட சம்பவங்கள், இந்த விமானத்தோட நம்பகத்தன்மையை கேள்விக்கு உட்படுத்தியிருக்கு.
கடந்த ஜூன் 14, 2025-ல், பிரிட்டனோட HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கப்பலில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு பறந்து கொண்டிருந்த எப்-35பி விமானம், ஹைட்ராலிக் கோளாறு காரணமா கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமா தரையிறக்கப்பட்டது. இந்த விமானத்தை சரி செய்ய, 25 பேர் கொண்ட பிரிட்டிஷ் பொறியாளர் குழு இந்தியா வந்து, 37 நாட்கள் கழிச்சு ஜூலை 22-ல் தான் விமானத்தை திருப்பி எடுத்துட்டு போனாங்க.
இதையும் படிங்க: சீனா செல்லும் பிரதமர் மோடி!! 2019க்கு பிறகு நடக்கும் மாற்றம்!! அமெரிக்காவுக்கு எதிராக கைகோர்ப்பு!!
இந்திய விமானப்படை, இந்த சமயத்துல முழு ஒத்துழைப்பு கொடுத்து, எரிபொருள் உள்ளிட்ட உதவிகளை செஞ்சது. இந்த சம்பவம், இந்தியாவுல பெரிய கவனத்தை ஈர்த்து, சமூக வலைதளங்களில் மீம்ஸ்களா வெளியாச்சு. பிரிட்டிஷ் உயர் ஆணையம், “இந்தியாவோட உதவிக்கு நன்றி, இந்த பாதுகாப்பு கூட்டுறவை மேலும் வலுப்படுத்துவோம்”னு சொல்லியிருக்கு.
இந்திய சம்பவத்துக்கு சில வாரங்களுக்கு பிறகு, ஆகஸ்ட் 10, 2025-ல், அதே HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கப்பலில் இருந்து மற்றொரு எப்-35பி விமானம், ஜப்பானின் ககோஷிமா விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமா அவசரமா தரையிறக்கப்பட்டது. இந்த விமானம், அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டனோட கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, காலை 11:30 மணிக்கு இந்த பிரச்னை வந்தது.
இதனால, ககோஷிமா விமான நிலைய ஓடுபாதை 20 நிமிஷம் மூடப்பட்டு, வணிக விமானங்கள் தாமதமாச்சு. விமானி பத்திரமா இருக்கார், விமானமும் பாதிப்பு இல்லாம இருக்கு. ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகம் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தி, விமானத்தை சரி செய்யும் பணி நடக்குதுன்னு சொல்லியிருக்கு.
எப்-35பி விமானங்கள், செங்குத்து தரையிறக்கம், குறுகிய ஓடுபாதையில் இயங்குற திறன் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களோட உருவாக்கப்பட்டவை. ஆனா, 2018-ல இருந்து இதுவரை 12 முறை தொழில்நுட்ப கோளாறுகள் நடந்திருக்கு. இந்த பிரச்னைகள், இந்த விமானத்தோட நம்பகத்தன்மையை கேள்விக்கு உட்படுத்தியிருக்கு.

இந்த விமானத்தை வாங்க ஆர்வமா இருந்த ஸ்பெயின், “வேண்டாம்”னு பின்வாங்கிடுச்சு. போர்ச்சுக்கல், ஸ்விட்சர்லாந்து, கனடா ஆகிய நாடுகளும் “யோசிச்சு சொல்றோம்”னு ஒதுங்கியிருக்காங்க. இந்தியாவும் ஒரு காலத்துல எப்-35 வாங்கலாம்னு யோசிச்சது, ஆனா டிரம்போட 50% வரி விதிப்பு, இந்த தொடர் கோளாறுகள் காரணமா பின்வாங்குற நிலையில் இருக்கு.
சீனாவோட ‘குளோபல் டைம்ஸ்’ பத்திரிகை, “எப்-35பி-யோட சிக்கலான அமைப்பு, அதிக பராமரிப்பு தேவைகள் பிரச்னையை உருவாக்குது”னு விமர்சிச்சிருக்கு. ரஷ்யாவோட ஸ்புட்னிக் இந்தியா, “பிரிட்டிஷ் எப்-35 விமானங்கள் அவசர தரையிறக்கங்களை சேகரிக்குது”னு கிண்டல் பண்ணியிருக்கு. இந்த தொடர் பிரச்னைகள், லாக்ஹீட் மார்ட்டினுக்கு பெரிய பின்னடைவா இருக்கு. ஒரு விமானத்தோட விலை 900-1100 கோடி ரூபாய் இருக்குற நிலையில், இந்த கோளாறுகள் அமெரிக்காவோட நட்பு நாடுகளை வாங்குவதில் இருந்து தயங்க வைக்குது.
எப்-35பி விமானங்கள், உலகின் மிக மேம்பட்ட போர் விமானங்களா இருந்தாலும், தொடர் தொழில்நுட்ப கோளாறுகள் இதோட நம்பகத்தன்மையை கேள்விக்கு உட்படுத்துது. இந்தியாவுல திருவனந்தபுரத்திலும், ஜப்பானுல ககோஷிமாவிலும் நடந்த சம்பவங்கள், இந்த விமானத்தோட பராமரிப்பு சவால்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கு.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள்.. எல்லையில் நீடித்த பதற்றம்.. சிதறிய தோட்டாக்கள்..