இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தலைமையிலான ககன்யான் திட்டம், இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டமாகும். ககன்யான் என்ற சொல்லுக்கு வான வாகனம் என்று பொருள். இத்திட்டத்தின் முதன்மை நோக்கம், மூன்று இந்திய விண்வெளி வீரர்களை பூமியின் தாழ்நிலைச் சுற்றுப்பாதைக்கு அனுப்பி, அங்கு மூன்று நாட்கள் தங்க வைத்து, பாதுகாப்பாக பூமிக்குத் திரும்ப அழைத்து வருவதாகும்.
இதன் மூலம் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்குப் பிறகு, சொந்தமாக மனித விண்வெளிப் பயணத்தை நடத்தும் நான்காவது நாடாக உயரும்.இத்திட்டத்தின் தொடக்கம் 2000களின் தொடக்கத்தில் இருந்தே விவாதிக்கப்பட்டாலும், 2018 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். டிசம்பர் 2018 இல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து, சுமார் 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் தொழில்நுட்ப சவால்கள் காரணமாக பலமுறை தாமதமான இத்திட்டம், தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது.

2025 டிசம்பர் மாதத்தில் முதல் மனிதரில்லா சோதனை ஏவுதல் நடைபெறவிருக்கிறது, அதைத் தொடர்ந்து மேலும் சில மனிதரில்லா பயணங்களுக்குப் பின், 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மனிதருடன் கூடிய பயணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தேதி குறிச்சாச்சு..!! விண்ணில் பாய தயாரானது LVM3 ராக்கெட்..!! இஸ்ரோ அறிவிப்பு..!!
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தத் திட்டத்தில் இஸ்ரோவின் பாராசூட் சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சண்டிகரில் உள்ள டி.பி.ஆர்.எல். மையத்தில் நடைபெற்ற ட்ராக் பாராசூட் சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. விண்வெளிக்கு செல்லும் பாராசூட் களின் செயல் திறன் மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் பாராசூட் அமைப்பின் சோதனை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. விண்கலம் வளிமண்டலத்திற்குள் நுழையும் போது அதன் திசையை நிலைப்படுத்தி வேகத்தை குறைப்பதே டிராக் பாரசூட் களின் வேலை. மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதற்கு முன்பு வியோமித்ரா என்ற பெண் ரோபோவை விண்வெளிக்கு அனுப்பவும் இஸ்ரோ முடிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: நெருங்கும் புத்தாண்டு... தலை தூக்கும் போதைப்பொருள் சப்ளை... தீவிர சோதனை...!