இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், தனது புதிய பாடலான ஒரு ஏழை தாயின் மகன்- ஐ பிரதமர் நரேந்திர மோடிக்கு அர்ப்பணித்து வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்வு, சமூக ஊடகங்களிலும் பொது இடங்களிலும் பரவலான பேச்சுக்கு உள்ளாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ், தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான இசைக்காக அறியப்படுபவர் என்றாலும், இந்தப் பாடல் அவரது அரசியல் மற்றும் சமூக உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
பாடலின் வரிகள் மற்றும் இசை, ஏழை மக்களின் போராட்டங்களையும், தாயின் அன்பையும், சமூக நீதியையும் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. ஜி.வி.பிரகாஷ் குமார், 2006ஆம் ஆண்டு வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், ஆயிரம், ஆடுகளம், மயக்கம் என்ன போன்ற படங்களுக்கு அளித்த இசைக்காக தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், அரசியல் தலைவர்களைப் பாடல்கள் மூலம் கொண்டாடும் மரபில் இணைந்து, பிரதமர் மோடியின் ஏழை பின்னணியிலிருந்து உயர்ந்த வரலாற்றைப் பாடலாக்கியிருக்கிறார். பாடலின் தலைப்பே ஏழை தாயின் மகன் என்பது, மோடியின் தாய் ஹீரா பெணும், அவரது ஏழ்மையான குடும்ப பின்னணியும், கடின உழைப்பால் இந்தியப் பிரதமரான வரலாற்றை நினைவூட்டுகிறது. இந்தப் பாடல், ஜி.வி.பிரகாஷின் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிடப்பட்டது. பாடலில், தமிழ் வரிகளுடன் கலந்த மெலடி இசை, ஏழைகளின் கனவுகளையும், தாயின் தியாகங்களையும் உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. பாடலின் இசையமைப்பில், பாரம்பரிய தமிழ் இசைக்கருவிகளுடன் நவீன பீட்டுகள் இணைக்கப்பட்டுள்ளன, இது ரசிகர்களிடையே புதிய உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு கோடிக்கணக்கில் சொத்து இருக்கு.. ஆனா சொந்த வீடு கிடையாதாம்...!
ஜி.வி.பிரகாஷ் தனது வெளியீட்டுச் செய்தியில், இந்தப் பாடல், ஏழை தாயின் மகனாகப் பிறந்து, நாட்டை வழிநடத்தும் பிரதமரின் பயணத்தை கொண்டாடுகிறது. பிரதமர் மோடியின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. ஒரு இசையமைப்பாளராகவும், பெருமைமிகு இந்திய குடிமகனாகவும் 140 கோடி பாதுகாவலர், பிரதமர் மோடியின் பிறந்த தினத்திற்கு அன்பு பரிசை இசை வடிவத்தில் வழங்குவதில் பெருமை கொள்வதாக ஜி.வி. பிரகாஷ் தெரிவித்தார். அவர் நீண்ட ஆயுளோடு மக்கள் பணியாற்ற வேண்டும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: ஹேப்பி பர்த்டே மோடி.. மனதார வாழ்த்திய இத்தாலி பிரதமர் மெலோனி..!!