டெல்லியில் இந்திய ராணுவத்தின் உயர்நிலை அதிகாரிகளும் பாகிஸ்தானில் இருக்கக்கூடிய உயர்நிலை ராணுவ அதிகாரிகளும் தற்போது பேச்சு வார்த்தையை
தொடங்கி இருக்கிறார்கள். டிஜிஎம்ஓ டைரக்டர் ஜெனரல் மிலிட்டிரி ஆபரேஷன் என சொல்லக்கூடிய இரு நாடுகள் இருக்கக்கூடிய ராணுவ உயர்மட்ட் அதிகாரிகளோடு இந்த பேச்சு வார்த்தை என்பது தற்போது டெல்லியில் தொடங்கி இருக்கிறது. ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி பஹல்காம் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பயணிகள் உயிரிழந்தனர். அதற்கு பிறகு மே 7ம் தேதி அதிகாலையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்தது.

இதனையடுத்து இரு நாடுகளுக்கு தொடர்ந்து மாறி, மாறி தாக்குதல் நடத்தி வந்தன. இதனால் உச்சக்கட்ட போர் பதற்றம் நிலவி வந்தது. குறிப்பாக இந்திய எல்லைக்கோட்டு பகுதிகளாக இருக்கக்கூடிய ஜம்மு-காஷ்மீர், அதேபோல பாகிஸ்தானை ஒட்டி இருக்கக்கூடிய மாநில பகுதிகளில் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலை நடத்தி வந்தது. இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது. முப்படைகளும் ஒருங்கிணைந்து பாகிஸ்தானுடைய அனைத்து வகையான பதிலடிகளுக்கும் தகுந்த பதிலடி கொடுத்தன. இந்த போர் பதற்றத்தை தணிக்க வேண்டும் என பல்வேறு நாடுகளும் கோரிக்கை விடுத்த நிலையில், அமெரிக்காவின் மத்தியஸ்தை அடுத்து தாக்குதல் முடிவுக்கு வந்தது.
இதையும் படிங்க: இனி கொடூர வேட்டைதான்... 2026-க்குள் பயங்கரவாதிகளை மொத்தமா அழிச்சிடணும்.. இந்தியா சூப்பர் ப்ளான்..!

இருப்பினும் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் அவ்வப்போது அத்துமீறி வரும் நிலையில், பாகிஸ்தான் மீண்டும் எல்லைக்கோட்டு பகுதியிலே தாக்குதல் நடக்கும் பொழுது இந்தியாவுடைய பதில் தாக்குதல் மிக கடுமையாக இருக்கும் என பிரதமர் மோடி எச்சரித்திருந்தார். இதற்கு முன்னதாக ராணுவத்தின் முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். முப்படைகளின் தலைமை தளபதிகள் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜாநாத் சிங் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் அடுத்தக்கட்டமாக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகளிடம் என்னென்ன விஷயங்களை வலியுறுத்த வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மத்தியஸ்தம் செய்ய தயார்.. 1000 ஆண்டுகால காஷ்மீர் பிரச்னை.. எல்லை விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் ட்ரம்ப்..!