அமெரிக்க அதிபர் டிரம்ப் பொறுப்பேற்றதிலிருந்து வெளிநாட்டவர்களுக்கு எதிரான கடுமையான குடிவரவு கொள்கைகளை அமல்படுத்தி வருவதால், புலம்பெயர்ந்தவர்களிடம் அதிருப்தி அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மிசிசிப்பி பல்கலைக்கழகத்தில் துணை அதிபர் JD Vance (ஜே.டி. வான்ஸ்) மாணவர்களுடன் கலந்துரையாடியபோது, இந்திய வம்சாவளி மாணவி ஒருவர் குடிவரவு கொள்கை குறித்து காரசாரமாக கேள்வி எழுப்பினார். 
அவரது சரமாரி கேள்விகள் அரங்கில் கரகரப்பை ஏற்படுத்தின. வான்ஸ், "அதிக இடம்பெயர்வு அமெரிக்காவின் சமூக அமைப்பை அச்சுறுத்தும்" என பதிலளித்தார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி, இந்திய-அமெரிக்க சமூகத்தில் பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது.
மிசிசிப்பி பல்கலைக்கழகத்தில் Turning Point USA என்ற அமைப்பின் நிகழ்ச்சியில் JD Vance பேசினார். இந்த நிகழ்ச்சி, அமெரிக்காவின் குடிவரவு கொள்கைகள் குறித்து விவாதிக்கும் இடமாக அமைந்தது. அப்போது, இந்திய வம்சாவளி மாணவி (பெயர் வெளியிடப்படவில்லை) கையேந்தி கேள்வி எழுப்பினார். அவர் கூறியது: "அமெரிக்காவில் ஏராளமான புலம்பெயர்ந்தவர்கள் இருப்பதாக நீங்கள் பேசுகிறீர்கள். 
இதையும் படிங்க: ட்ரம்புக்கு ஆப்பு வைத்த அமெரிக்க நிறுவனங்கள்! இந்தியா நோக்கி படையெடுப்பு! மோடி மேஜிக்!
நீங்கள் எங்களின் இளம்வயது, எங்களின் செல்வத்தை இந்த நாட்டில் செலவழிக்க வைத்து, எங்களுக்கு ஒரு கனவைக் கொடுத்தீர்கள். நீங்கள் எங்களுக்கு எதுவும் கடன்பட்டவர்கள் அல்ல. அதற்காக நாங்கள் கடினமாக உழைத்திருக்கிறோம். 'புலம்பெயர்ந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். நாங்கள் அவர்களை வெளியேற்றப்போகிறோம்' என்று துணை அதிபராக இங்குள்ள மக்களிடம் எப்படி சொல்ல முடியும்? நீங்கள் கேட்ட பணத்தை நாங்கள் செலுத்தியுள்ளோம். நீங்கள் எங்களுக்கு வழி காட்டினர்கள், இப்போது அதை எப்படி நிறுத்த முடியும்?" 
அவரது கேள்விகள் அரங்கில் கூடியிருந்த மாணவர்களிடம் பெரும் எதிரொலியை ஏற்படுத்தின. அனைவரும் கைகளைத் தட்டி ஆதரவு தெரிவித்தனர். இந்திய வம்சாவளி மாணவர்களின் கனவுகளை அமெரிக்கா விற்று, இப்போது தடை செய்வதாக அவரது கேள்விகள் அமெரிக்காவின் குடிவரவு கொள்கையின் முரண்பாட்டை வெளிப்படுத்தின. இந்த சம்பவம், ஹெச்-1பி விசா கட்டுப்பாடுகள், சர்வதேச மாணவர்களின் விசா ரத்து போன்ற சமீபத்திய மாற்றங்களுடன் தொடர்புடையது.

இதற்குப் பதிலாக, JD Vance சுதாரித்துக்கொண்டு பேசினார். "இங்கு நீங்கள் நினைக்கும் அளவுக்கு ஏதும் நடக்கவில்லை. கவலைப்பட வேண்டாம். அதிகமான மக்களை நாட்டிற்குள் அனுமதிப்பது அமெரிக்காவின் சமூகக் கட்டமைப்பிற்கு அச்சுறுத்தல். 
ஒருவர் அல்லது 10 பேர் அல்லது 100 பேர் சட்டவிரோதமாக இங்கு வந்து அமெரிக்காவுக்கு பங்களிப்பு கொடுத்தால், எதிர்காலத்தில், 10 லட்சம் அல்லது ஒரு கோடி பேரை அனுமதிக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்திருப்பதாக அர்த்தமாகி விடுமா? அது தவறானது" என அவர் கூறினார். வான்ஸ், குடிவரவு அளவுகளை குறைக்க வேண்டும் என தனது நிலைப்பாட்டை வலியுறுத்தினார். "இந்தியாவில் இருந்து வந்து சட்டப்படி வாழும் மக்கள் பாதுகாக்கப்படுவார்கள்" என சமாதானம் கூறினார்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்திய-அமெரிக்க சமூகத்தில் பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது. பலர் மாணவியின் கேள்விகளை ஆதரித்து, "அமெரிக்காவின் கனவு விற்று, இப்போது தடை" என விமர்சித்துள்ளனர். சிலர் வான்ஸின் பதிலை "முரண்பாடு" என விமர்சித்துள்ளனர். வான்ஸின் மனைவி உஷா வான்ஸ் இந்திய வம்சாவளி என்பதால், இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாணவி, "நீங்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்களை ஆதரிக்கிறீர்கள்" எனக் கூறியது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது.
டிரம்ப் அமைச்சரவை, குடிவரவு கொள்கையில் கடுமையாக உள்ளது. ஹெச்-1பி விசாக்களை குறைக்க, சர்வதேச மாணவர்களின் விசாக்களை ரத்து செய்யும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து வரும் மாணவர்கள், தொழிலாளர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். அமெரிக்காவில் 40 லட்சம் இந்தியர்கள் வாழ்கின்றனர். அவர்களின் பங்களிப்பு பொருளாதாரத்துக்கு முக்கியம். இந்த சம்பவம், அமெரிக்காவின் குடிவரவு கொள்கையின் முரண்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ட்ரம்புக்கு ஆப்பு வைத்த அமெரிக்க நிறுவனங்கள்! இந்தியா நோக்கி படையெடுப்பு! மோடி மேஜிக்!