வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
இந்தியா ›

கெடு விதித்த மத்திய அரசு… ரூ.827 கோடியை பயணிகளுக்கு திருப்பி வழங்கிய இண்டிகோ நிறுவனம்…!

விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் 827 கோடி ரூபாயை பயணிகளுக்கு இண்டிகோ நிறுவனம் திரும்பி வழங்கி உள்ளதாக தகவல் கூறப்பட்டுள்ளது.

விமான நிறுவனமான இண்டிகோ (IndiGo) தனது நடவடிக்கைகளில் மிகப்பெரிய சீர்குலைவை சந்தித்தது. இது இந்திய விமான போக்குவரத்து வரலாற்றில் ஒரு மைல்கறையாக அமைந்துள்ளது, ஏனென்றால் இந்த சம்பவம் ஆயிரக்கணக்கான பயணிகளை தவிக்கவிட்டது. நாடு முழுவதும் கடந்த ஒரு வார காலமாக இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

ஆயிரக்கணக்கில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் கடும் அவதிக்குள்ளான பயணிகள் அவதி அடைந்தனர். விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் டிக்கெட் எடுத்துக் காத்திருந்த பயணிகள் பெருத்த ஏமாற்றம் அடைந்து இருந்தனர். விமானிகளுக்கான புதிய விதிகளை அமல்படுத்துவதில் ஏற்பட்ட சுணக்கத்தால் இண்டிகோவுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

பணியாளர்கள் பிரச்சனையால் ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளுக்கு இதுவரை ரூ.827 கோடியை இண்டிகோ நிறுவனம் திருப்பித் தந்ததாக தெரிவித்துள்ளது. டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் 7ஆம் தேதி வரை இண்டிகோ விமானங்கள் ரத்தான நிலையில் பணத்தை திருப்பி கொடுக்க மத்திய அரசு கெடு விதித்த நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும், இன்று நாடு முழுவதும் சுமார் 1800 இண்டிகோ விமானங்கள் இயக்கப்படுவதாக அந்த நிறுவனம் விளக்கம் அளித்து உள்ளது. புதிய விதிகளை DGCA வாபஸ் பெற்றதை அடுத்து இண்டிகோ நிறுவனத்தின் சேவை சீராகத் தொடங்கியது.

இதையும் படிங்க: போலாம் ரைட்..!! மீண்டும் தொடங்கிய இண்டிகோ விமான சேவை..!! பயணிகள் சற்று நிம்மதி..!!

பயணிகளுக்கு டிக்கெட் தொகையை திருப்பித்தந்த இண்டிகோ 48 மணி நேரத்தில் பயணிகளின் 4,500 உடைமைகளை திருப்பித்தந்ததாக தெரிவித்து உள்ளது. பயணிகளின் 9,000-க்கும் மேற்பட்ட லக்கேஜுகளில் 4,500 லக்கேஜ்கள் திருப்பி தரப்பட்டதாக இண்டிகோ விளக்கம் அளித்துள்ளது. 

இதையும் படிங்க: இண்டிகோ விமான சேவை நெருக்கடி எதிரொலி..!! புதிய விதிகளை திரும்பப் பெற்றது DGCA..!!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளி பரிசுப் பொருட்கள் விநியோகம்.. தேர்தலுக்கு முன்பே களமிறங்கிய தவெக! ரகுபதி பரபரப்பு குற்றச்சாட்டு!!தமிழ்நாடு
தீபாவளி பண்டிகை: சென்னை மெட்ரோ ரயில்களில் மாலை நேர ‘பீக் ஹவர்ஸ்’ சேவை நீட்டிப்பு!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी