இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ (ISRO) 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் தரையிறங்கி மற்றும் பிரக்யான் உருளியை நிலவின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறக்கியது. இந்த சாதனை உலகளவில் இந்தியாவின் விண்வெளி ஆய்வுத் திறனைப் பறைசாற்றியது மட்டுமல்லாமல், இந்தியாவை நிலவில் தரையிறங்கிய நான்காவது நாடாகவும், நிலவின் தென்துருவத்தில் முதல் முறையாக தரையிறங்கிய நாடாகவும் உயர்த்தியது.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனையைக் கொண்டாடும் வகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 23 ஆம் தேதியை தேசிய விண்வெளி தினமாக அறிவித்தார். அதன்படி, தேசிய விண்வெளி நாளை ஒட்டி டெல்லியில் நடைபெற்று வரும் விழாவில் காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், சந்திராயன் 4 திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

வெள்ளிகிரகத்தை சுற்றி வந்து ஆய்வு செய்யும் ஆர்பிட்டர் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறினார். 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவுக்கான விண்வெளி ஆய்வு நிலையம் நிறுவப்பட இருப்பதாகவும் கூறினார். Bis எனப்படும் விண்வெளி ஆய்வு நிலையத்தின் முதற்கட்ட பணிகள் 2028 ஆம் ஆண்டில் தொடங்குவதாக கூறினார். 2040 ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்பி வைத்து திருப்பி அழைத்து வரும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியாவில் மீண்டும் டிக் டாக் செயலியா..!! மத்திய அரசு சொன்ன தகவல் என்ன..??
மற்ற நாடுகளுக்கு இணையாக இந்திய விண்வெளி ஆராய்ச்சிகள் இருக்கும் என்றும் நாராயணன் உறுதியளித்தார். மேலும், அடுத்த தலைமுறை ராக்கெட் லாஞ்சர்க்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: இந்தியாவுல அதுக்கெல்லான் சான்ஸே இல்லை!! வங்கதேசத்தின் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு பதில்!!