பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளான முஷரபாபாத், பஹவல்பூர் உள்ளிட்ட இடங்களில் இந்திய ராணுவம் குறி வைத்து தாக்குதல் நடத்தியது. ஆப்ரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டுள்ள இந்த தாக்குதல் சம்பவத்தில் தீவிரவாதிகளின் 9 எல்லைகள் குறி வைத்து தாக்கப்பட்டன. இதில் 17 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் பயங்கரவாதத்தின் அனைத்து ஆதாரங்களையும் ஒழிப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாடு, சமரசமற்றதாகவும், எப்போதும் உச்சபட்ச தேசிய நலனில் நங்கூரமிடப்பட்டதாகவும் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தீவிரவாதிகளை அடிச்சு நொறுக்குங்க..! வேட்டையாடுங்க..! முப்படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த மோடி..!

இது ஒற்றுமைக்கான நேரம் என்றும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு நாட்டின் பதிலடியில் அரசாங்கத்திற்கு எங்கள் முழு ஆதரவு இருக்கும் என்று இந்திய காங்கிரஸ் திட்டவட்டமாக கூறி வருகிறது என்றும் கூறினார். இந்திய காங்கிரஸ் நமது ஆயுதப் படைகளுடன் உறுதியாக நிற்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதலில் தீவிரவாதிகள் என்ன செய்தனர்? நேரில் பார்த்த பெண் பரபரப்பு வாக்குமூலம்!!