உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பிஆர் கவாயை நியமிக்க குடியரசுத் தலைவர் தெளரபதி முர்மு முறைப்படி கையொப்பமிட்டு அனுமதியளித்தார். மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் “இந்திய அரசியலமைப்பு 124 இன் பிரிவு (2)ல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்ற நீதிபதியான பூஷன் ராமகிருஷ்ண கவாயை 2025 மே 14 முதல் இந்தியாவின் தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மே 13ம்தேதி ஓய்வு பெற உள்ளார், அன்றைய தினம் நீதிமன்ற பொறுப்புகளை கவாய் ஏற்பார்.

உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பொறுப்பு ஏற்க இருக்கும் நீதிபதி கவாய் டிசம்பர் 23ம்தேதி வரை அந்தப் பதவியில் இருப்பார் அதன் பின் ஓய்வு பெறுவார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக, கவாய் 2019ம் ஆண்டு மே 29ம் தேதி பதவி உயர்வு பெற்றார். 2003ம் ஆண்டு நவம்பரில் மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு அதன்பின் 2005ம் ஆண்டு நவம்பரில் நிரந்தர நீதிபதியானார்.
இதையும் படிங்க: ஆபாச காட்சிகள்.. அமேசான், நெட்பிளிக்ஸிற்கு உச்ச நீதிமன்றம் அதிரடி...!

நாக்பூர் நகராட்சி, அமராவதி நகராட்சி மற்றும் அமராவதி பல்கலைக்கழகத்தின் நிலையான ஆலோசகராக கவாய் பணியாற்றினார். 1992ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மும்பை உயர் நீதிமன்றம் நாக்பூர் பெஞ்சில் உதவி அரசு வழக்கறிஞராகவும் கூடுதல் அரசு வழக்கறிஞராகவும் கவாய் நியமிக்கப்பட்டார். இந்தப் பதவியில் 1993ம் ஆண்டு ஜூலை இருந்து 2000ம் ஆண்டு ஜனவரி 17ம் நாக்பூர் பெஞ்சில் அரசு வழக்கறிஞராக கவாய் நியமிக்கப்பட்டார்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக கவாய் இருந்தபோது, பணமதிப்பிழப்பு தொடர்பான வழக்கு, தேர்தல் பத்திரத் திட்டம், புல்டோசர் இடிப்பு வழக்கு, காஷ்மீர் 370 சட்டப்பிரிவு ரத்து, எஸ்சி, எஸ்டி பிரிவுகளில் கிரீமிலேயர், அமலாக்கபிரிவு இயக்குநரின் பதவிக்காலம் நீ்ட்டிப்பு விவகாரம், பிரசாந்த் பூஷன் அவமதிப்புவழக்கு, ராகுல் காந்தி அவதூறு வழக்கு, டீஸ்டா செடல்வாட் ஜாமீன் வழக்கு ஆகியவற்றில் குறிப்பிடத்தகுந்த தீர்ப்புகளை கவாய் வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: உச்ச நீதிமன்றத்தை விமர்சித்த பாஜக எம்.பி.க்கள் மீது ஏன் நடவடிக்கையில்லை..? காங்கிரஸ் கேள்வி..!