கர்நாடகாவின் ஆளும் காங்கிரஸ் அரசு, 2023 சட்டமன்றத் தேர்தலின் போது ஆலந்த் தொகுதியில் நடந்த வாக்கு திருட்டு புகாரை விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைத்துள்ளது. இந்த முடிவு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கடுமையான விமர்சனங்களுக்குப் பிறகு வந்துள்ளது.

முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான அரசு, தேர்தல் ஆணையத்தின் (ECI) தடைகளைத் தாண்டி, விரைவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆலந்த் தொகுதி, கலபுர்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. 2023 தேர்தலுக்கு முன், 6,018 வாக்காளர்களின் பெயர்களைத் தேர்தல் பட்டியலில் இருந்து நீக்கியதாக புகார் எழுந்தது. மேலும் வாக்கு திருட்டு நடைபெற்றதாகவும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: Youtube சேனல்களுக்கும் லைசன்ஸ் அவசியம்.. பரிசீலிக்கும் கர்நாடக அரசு..!!
புகாரின்படி, அறியப்படாத நபர்கள், போலி ஆவணங்கள், போலி மொபைல் எண்கள் மற்றும் கர்நாடகாவுக்கு வெளியிலிருந்து IP முகவரிகளைப் பயன்படுத்தி, ECIயின் NVSP (National Voters' Service Portal) ஆப் மூலம் Form 7 விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர். இதில், 5,994 விண்ணப்பங்கள் போலியானவை எனத் தெரியவந்தது. தேர்தல் ஆணையம், 6,018 விண்ணப்பங்களில் வெறும் 24 பெயர்களை மட்டும் நீக்கியதாகக் கூறுகிறது. மீதமுள்ளவை நிராகரிக்கப்பட்டன.
இது தொடர்பாக கர்நாடக சிஐடி (குற்ற புலனாய்வு துறை) விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை தொடர்பாக குறிப்பிட்ட சில தரவுகளை அளிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடந்த 18 மாதங்களில் 18 முறை சிஐடி கடிதம் அனுப்பியது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது என்று தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தேர்தலின்போது மாநிலம் முழுவதும் பதிவான அனைத்து வாக்கு திருட்டு புகார் குறித்து விசாரிக்க கர்நாடக அரசு, சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்துள்ளது. ஆலந்த் தொகுதியில் நடைபெற்ற வாக்கு திருட்டு, வாக்காளர் பட்டியல் மோசடி தொடர்பான வழக்கை விசாரித்து வரும் குற்ற புலனாய்வு துறை ஏடிஜிபி கே.பி.சிங் இந்த சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தலைமை தாக்குவார் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

இந்த குழு கர்நாடகாவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எழுந்த வாக்கு திருட்டு, வாக்காளர் பட்டியல் மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து மாநில அரசுக்கு அறிக்கையாக தாக்கல் செய்ய உள்ளது. விசாரணை முடிவுகள், தேசிய அளவில் தேர்தல் சீர்திருத்தங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: Youtube சேனல்களுக்கும் லைசன்ஸ் அவசியம்.. பரிசீலிக்கும் கர்நாடக அரசு..!!