கேரள முதல்வர் பினராயி விஜயன் திங்கள்கிழமை (டிசம்பர் 22, 2025) சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான முழு உடல்நலப் பரிசோதனைக்காகவே அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பினராயி விஜயன் ஆண்டுதோறும் சென்னையில் உள்ள இந்த மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம். அந்த வகையில் இம்முறையும் அவர் சென்னை வந்து அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரத்தப் பரிசோதனை, இசிஜி, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உள்ளிட்ட அடிப்படை மற்றும் விரிவான பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இந்தப் பரிசோதனைகள் ஒரு சில நாட்கள் நீடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கேரளாவில் ஆழமாக காலூன்றும் பாஜக! உள்ளாட்சி மட்டுமல்ல சட்டசபையிலும் எதிரொலிக்குமா வெற்றி?!

கேரள முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகும் பினராயி விஜயன் சென்னை மருத்துவமனையைத் தேர்வு செய்வது குறிப்பிடத்தக்கது. இந்த மருத்துவமனையின் நவீன வசதிகள் மற்றும் நிபுணத்துவம் காரணமாக அவர் இங்கு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மருத்துவமனை தரப்பில் இருந்து விரைவில் விரிவான அறிக்கை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பினராயி விஜயனின் உடல்நலம் தொடர்பான இந்தச் செய்தி கேரளா மற்றும் தமிழக அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. அவரது உடல்நலம் நன்றாக உள்ளது என்று கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கேரளாவில் ஆழமாக காலூன்றும் பாஜக! உள்ளாட்சி மட்டுமல்ல சட்டசபையிலும் எதிரொலிக்குமா வெற்றி?!