பொது இடங்களில், குறிப்பாக பேருந்துகள், ரயில்கள், பூங்காக்கள், சந்தைகள், மற்றும் பிற பொது இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள் மற்றும் பாலியல் சில்மிஷங்கள் இன்றைய சமூகத்தில் முக்கியமான பிரச்சினையாக உள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, பெண்களுக்கு எதிரான இத்தகைய செயல்கள் அவர்களின் பாதுகாப்பு, சுதந்திரம் மற்றும் மனநலத்தை பாதிக்கின்றன.
பெண்களை இழிவாகப் பேசுதல், ஆபாசமான கருத்துகள், பாலியல் குறிப்புகள், மற்றும் கிண்டல் செய்யும் பேச்சுகள், தேவையற்ற தொடுதல், மோதுதல், உரசுதல், மற்றும் பாலியல் தாக்குதல்கள், தொடர்ந்து உற்று நோக்குதல், முறைத்து பார்த்தல், மற்றும் பாலியல் குறிப்பு தரும் சைகைகள் ஆபாசமான பாடல்கள் பாடுதல், புகைப்படம் எடுத்தல், மற்றும் சமூக ஊடகங்களில் துன்புறுத்துதல் போன்றவை பேருந்துகள் உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்களில் இத்தகைய சம்பவங்கள் அதிகம் நடைபெறுகின்றன.
இதையும் படிங்க: சர்ரென அதிகரிக்கும் நிபா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை! மருத்துவ கண்காணிப்பு தீவிரம்..!
அந்த வகையில் கேரளாவில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பேருந்தில் தனக்கு அருகில் அமர்ந்திருந்த இளம் பெண் ஒருவரை ஒரு ஆண் தனது கையை வைத்து தகாத முறையில் உரசி வந்துள்ளார்.

இதனைப் பார்த்த அந்தப் பெண்ணின் சகோதரி ஒருவர் கன்னத்தில் அறைந்து சரமாரியாக கேள்விகளால் துளைத்தார். உனக்கெல்லாம் அக்கா தங்கையே இல்லையா, அவர்களிடம் இப்படி தான் நடந்து கொள்வாயா, எங்க கை வைக்கிற, இப்ப கை வை பாப்போம் என கூறி கன்னத்தில் அறைந்து தாக்கினார்.
இதனை வீடியோவாக எடுத்த நிலையில் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இது போன்ற முறையற்ற நிகழ்வுகளில் ஈடுபடும் நபர்களுக்கு இதுபோல அடியும் உதையும் தொடர்ந்து கொடுத்தால் தான் புரியும் என்றும் அமைதியாகப் போனால் மேலும் மேலும் குற்றத்தில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்கள் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கேரளாவில் பரவும் நிபா வைரஸ்.. கீழே விழுந்த பழங்களை சாப்பிடாதீங்க.. அமைச்சர் மா.சு அறிவுறுத்தல்..!