வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
அரசியல்

கள் விஷம்; உணவல்ல… சீமானை கைது பண்ணுங்க… கிருஷ்ணசாமி அதிரடி!!

கள் இறக்கும் போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது ஏன் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

துாத்துக்குடி மாவட்டம், பெரியதாழை பகுதியில், கடந்த 15ம் தேதி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பனை மரத்தில் ஏறி, கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். இதற்கு பல கண்டனங்களும் எதிர்ப்புகளும் எழுந்தன. இந்த நிலையில் கள் இறக்கும் போராட்டத்தை நடத்திய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கடந்த வாரம் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பெரியதாழை பகுதியில் பனைமரத்தில் ஏறி கள் இறக்கி குடித்ததையும், அதை ஒரு போராட்டமாகவும் செய்தார். இது குறித்த தகவல் வெளியானபோதே நாங்கள் கள் ஒரு உணவல்ல விஷம் என்று தெரிவித்திருந்தோம். அதையும் மீறி சீமான் கள் இறக்கினார். கள் இறக்கி அவர் குடித்தது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் கள்ளு குடிக்க வைத்தார். இது சட்ட விரோதமானது. காவல்துறையினர் இதைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். கள் என்பது உணவல்ல, அது ஒரு விஷம். தமிழ் இலக்கியங்களில் கூட கள் குடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: எங்க ஊரு கோவில்ல உரிமை இல்லையா? போராடிய மக்களை குண்டுகட்டாக கைது செய்த போலீஸ்!!

கள் என்பது ஏழை மக்களை மேலும் அடிமையாக்கும் ஒரு கருவி. புதிய தமிழகம் கட்சி தொடங்கிய நாள் முதல் பூரண மதுவிலக்கையே முக்கியக் கொள்கையாக வைத்திருக்கிறோம். இது தொடர்பாக 2023-ல் ஆளுநர் மாளிகை நோக்கி மதுவிலக்கு பேரணி நடத்தப்பட்டது.சீமான் போன்றவர்கள் “தமிழ் தேசியம்” பேசிக்கொண்டே கள் குடிப்பதை ஊக்குவிப்பது ஆபத்தானது, இது ஈழத் தமிழர்களிடமிருந்து வருகிற நன்கொடை பணத்தை தவறாக பயன்படுத்துவதைப் பறைச்சாற்றுகிறார். தமிழ் தேசியம் பேசிக் கொண்டே சாராய அரசியல் செய்ய முயல்கிறார் சீமான். இது ஓர் அபாயகரமான முன்னுதாரணம். சீமான் திருந்த வேண்டும்.

இல்லையெனில் திருத்தப்படுவார். ஜூன் 15ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற “கள் இறக்கும்” நிகழ்வில் பங்கேற்றவர்களையும் சீமானையும் கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் வலியுறுத்துகிறேன். “இந்த நாட்டு மக்கள் 70 ஆண்டுகளாக குடியிலிருந்து முன்னேற முயல்கின்றனர். இதுபோன்ற பித்தலாட்டக்காரர்கள் அவர்களை மீண்டும் கீழ்த்தட்ட மக்களாக மாற்ற முயற்சிக்கிறார்கள். இதை தமிழக மக்கள் புரிந்துகொண்டு எதிர்க்க வேண்டும். மாநில அளவில் போராட்டங்களை திட்டமிட்டு நடத்தியுள்ளனர்.  எதிர்காலத்திலும் இதுபோன்று கள் மீது விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்போகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சம்பவம் செய்த டிரம்ப்.. லாஸ் ஏஞ்சல்ஸில் வெடித்த கலவரம்.. மேலும் 2000 பாதுகாப்பு வீரர்கள் குவிப்பு..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी