ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவராக செயல்பட்டவர் லாலு பிரசாத் யாதவ். பீகார் முன்னாள் முதல்வரான இவர், மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். தற்போது வயது முதிர்வு காரணமாக தீவிர அரசியலில் இருந்து அவர் ஒதுங்கி உள்ளார். இப்போது ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியை தேஜஸ்வி யாதவ் வழிநடத்தி வருகிறார். லாலு பிரசாத் யாதவின் இன்னொரு மகன் தான் தேஜ் பிரதாப் யாதவ்.

இந்த நிலையில், பீகார் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அனுஷ்கா யாதவ் என்ற பெண்ணுடன் கள்ள உறவில் இருப்பதாக தேஜ் பிரதாப் பகிரங்கமாக கூறியதாக தெரிகிறது. அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் கள்ள உறவு விவகாரம் பூதாகரமானது.
இதையும் படிங்க: விண்ணை பிளந்த அரோகரா கோஷம்.. திருச்செந்தூரில் கடலலையாய் திரண்ட பக்தர்கள்..!

இதன் காரணமாக, நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் தனது மூத்த மகன் தேஜ் பிரதாப்பை கட்சியிலிருந்து நீக்குவதாக லாலு பிரசாத் தெரிவித்துள்ளார். கட்சி மட்டுமல்லாது குடும்பத்தை விட்டும் விலக்கி வைப்பதாகாவும் லாலு பிரசாத் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கோவை, நீலகிரிக்கு அதீத கனமழை எச்சரிக்கை! அவசியமின்றி வெளியே போகாதீங்க மக்களே!