அமெரிக்காவில் ஜூன் மாதம் முதல் தொடங்க உள்ள காலாண்டில் விற்கப்பட உள்ள ஐபோன்களில் பெரும்பாலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் பெருமையுடன் குறிப்பிட்டார். வியட்நாமில் இருந்து ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட், ஆப்பிள் கைக்கடிகாரம், மேக்ஸ், ஏர்பாட் ஆகியவை ஏற்றுமதியாக உள்ளன எனத் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனப் பொருட்கள், சீனாவில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களுக்கு 145 சதவீதம் வரிவிதிப்பு விதித்தைத் தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனம், தனது உற்பத்தியை இந்தியா, வியட்நாம் பக்கம் திருப்பியது. இதன் மூலம் 90 கோடி டாலர் வரிவிதிப்பிலிருந்து தப்பித்துள்ளது.
இதையும் படிங்க: ஸ்டீல், ஆட்டொமொபைல் உதிரி, மருந்துகளுக்கு வரிவிலக்கு.. அமெரிக்காவுக்கு சலுகையளிக்க இந்தியா திட்டம்..!

அமெரிக்காவுக்கு வெளியே ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள், உள்ளிட்ட மின்னனு சாதங்கள் விற்பனையில் பெரும்பங்கு தயாரிப்பு சீனாவில் இருந்துதான் வருகிறது. செமிகன்டக்டர் இறக்குமதி செய்வதில் உள்ள சிக்கல் காரணமாக ஐபோன்மற்றும் ஐமேக் ஆகியவற்றுக்கு ஏப்ரல் மாதம் வந்த பரஸ்பர வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்தியாவில் ஆப்பிள் மொபைன்கள் உற்பத்தி எப்போதும் இல்லாத வகையில் 2025 மார்த் மாதத்தில் முடிந்த காலாண்டில் 219 சதவீதம் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. 97.6 % பொருட்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகியுள்ளன. இந்தியா மீது 27 சதவீதம் வரிவிதிப்பு இருக்கும் நிலையில் சீனப் பொருட்களுக்கு 145 சதவீதம் வரிவிதிப்பு இருப்பதால், இந்திய உற்பத்தி ஆப்பிள் முன்னுரிமை அளிக்கிறது.

2025, மார்ச் 30ம் தேதி முடிந்த காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் 5% அதிகரித்து 953.50 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஐபோன்கள்விற்பனை சக்கைபோடு போட்டதால்தான் 29 சதவீத விற்பனை உயர்வு ஏற்பட்டது. ஆனால் சீனாவில் ஆப்பிள் மொபைல் விற்பனை 2.2% குறைந்து 1600 கோடி டாலராகக் குறைந்துவிட்டது. ஆப்பிள் மொபைல் விற்பனையைத் தொடர்ந்து இந்தியா, ஐக்கி ஐக்கிய அரபு அமீரகத்தில் கூடுதலாகசில விற்பனை மையங்களை திறக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: சும்மா இறங்கி அடிங்க.. இந்தியாவுக்கு ஃபுல் சப்போர்ட்.. ரஷ்யா, ஜப்பான் வரிசையில் அமெரிக்கா..!