• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    என்னை மன்னிச்சிடுங்க மா..!! உருக்கமான வீடியோ..!! நீட் மறுதேர்வு எழுதிய மாணவர் தற்கொலை..!!

    நீட் மறுதேர்வு எழுதிய மாணவர் ஒருவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Shanthi M. Thu, 25 Jun 2026 17:26:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Maharashtra-NEET-aspirant-died-by-suicide

    மராட்டிய மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது மாணவர் சுஷில் தாகே, நீட் மறுதேர்வு எழுதிய நிலையில் தனது வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்டவற்றுக்கான நுழைவுத் தேர்வான நீட், ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கியத் தேர்வாகக் கருதப்படுகிறது. 

    இந்த ஆண்டு மே 3-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு புகார் எழுந்தது. இதையடுத்து சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் புனேவைச் சேர்ந்த வேதியியல் விரிவுரையாளர் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த சர்ச்சையால் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு ஜூன் 21-ம் தேதி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 5,500க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் 22.7 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்த மறுதேர்வை எழுதினர்.

    அந்த வரிசையில், ஹிங்கோலி பகுதியைச் சேர்ந்த சுஷில் தாகேவும் தேர்வு எழுதினார். தேர்வுக்குப் பிறகு அவர் மிகவும் சோர்வுடனும், மன உளைச்சலுடனும் காணப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். “தேர்வு சற்று கடினமாக இருந்தது” என்று அவர் வீட்டில் கூறியிருந்தார். தேர்வு முடிந்த சிறிது நேரத்திலேயே அவர் தனது செல்போனில் ஒரு வீடியோவை பதிவு செய்தார். அந்த வீடியோவில் தாயாரிடம் உருக்கமாக மன்னிப்புக் கேட்டுப் பேசியுள்ளார்.

    இதையும் படிங்க: பீகாரில் நீட் மறுதேர்வு: வெளிச்சத்திற்கு வந்த ஆள்மாறாட்ட முறைகேடு..!! 30 பேர் அதிரடி கைது..!!

    neet

    “என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா… நான் எனது உயிரை எடுத்துக் கொள்ளப் போகிறேன். தயவுசெய்து கவலைப்படாதீர்கள். அடுத்த பிறவியில் மீண்டும் உங்கள் மகனாகப் பிறப்பேன். ஆனால் இப்படியான வலியை உங்களுக்கு தரமாட்டேன். என்னைப் பற்றி கவலைப்படாதீர்கள். உங்கள் உடல்நிலையை கவனித்துக் கொள்ளுங்கள். நான் மிகுந்த வேதனையில் இருக்கிறேன். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. எனக்கு எதுவுமே புரியவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள்” என அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார்.

    இந்த வீடியோவை தனது குடும்பத்தினருக்கு அனுப்பிவிட்டு, சுஷில் அருகிலுள்ள கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் மன அழுத்தம், போட்டித் தேர்வுகளின் தாக்கம் ஆகியவை குறித்து மீண்டும் விவாதங்கள் எழுந்துள்ளன.

    நீட் தேர்வு அழுத்தத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது கவலையளிக்கிறது. கல்வி அமைப்பில் மாணவர்களின் மனநலனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியத்தை இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது.
     
    இதையும் படிங்க: நாடு முழுவதும் தொடங்கிய நீட் மறுதேர்வு: கூடுதல் 15 நிமிட நேரத்துடன் தேர்வு எழுதும் 22 லட்சம் மாணவர்கள் !

    மேலும் படிங்க
    திருவள்ளூர் வாயு கசிவு விபத்தல்ல, கொடூரமான படுகொலை: அரசுக்கு எதிராக கே. பாலகிருஷ்ணன் கண்டனம்!

    திருவள்ளூர் வாயு கசிவு விபத்தல்ல, கொடூரமான படுகொலை: அரசுக்கு எதிராக கே. பாலகிருஷ்ணன் கண்டனம்!

    தமிழ்நாடு
    DNT ஒற்றை சான்றிதழ் விவகாரம்: கொள்கை முடிவை முதலமைச்சரே எடுப்பார் - அமைச்சர் சம்பத்குமார்!

    DNT ஒற்றை சான்றிதழ் விவகாரம்: கொள்கை முடிவை முதலமைச்சரே எடுப்பார் - அமைச்சர் சம்பத்குமார்!

    அரசியல்
    வெள்ளை அறிக்கையா..? உண்மையை மறைத்த தவெக... பூந்து விளாசிய செந்தில் பாலாஜி..!!

    வெள்ளை அறிக்கையா..? உண்மையை மறைத்த தவெக... பூந்து விளாசிய செந்தில் பாலாஜி..!!

    தமிழ்நாடு
    திமுக ஒன்னும் செய்யலயா..? யாருடைய சாதனை..? செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி..!!

    திமுக ஒன்னும் செய்யலயா..? யாருடைய சாதனை..? செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி..!!

    தமிழ்நாடு
    நெய்வேலி தமிழ்நாட்டின் அடையாளம்... பங்கு விற்பனை முடிவுக்கு விஜய் கடும் எதிர்ப்பு..!! பிரதமருக்கு கடிதம்..!!

    நெய்வேலி தமிழ்நாட்டின் அடையாளம்... பங்கு விற்பனை முடிவுக்கு விஜய் கடும் எதிர்ப்பு..!! பிரதமருக்கு கடிதம்..!!

    தமிழ்நாடு
    சோதனை, வழக்கு, பரபரப்பு..! எ.வ.வேலுவுக்கு ஆதரவாக களமிறங்கிய திமுக..! ஆ.ராசா சந்திப்பு..!!

    சோதனை, வழக்கு, பரபரப்பு..! எ.வ.வேலுவுக்கு ஆதரவாக களமிறங்கிய திமுக..! ஆ.ராசா சந்திப்பு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share