இன்று இந்தத் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர், திரும்பி வரும் தொழிலாளர்களுக்கு ஒரு வருடத்திற்கு அல்லது அவர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மாதத்திற்கு ரூ.5000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். "காத்யா சதி" உணவு உறுதித் திட்டம் மற்றும் 'சவஸ்தா சுவாதி' சுகாதாரத் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். அவர்களின் குழந்தைகளின் கல்வியையும் அரசாங்கம் கவனித்துக் கொள்ளும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் துன்புறுத்தப்பட்டு விரட்டியடிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டியுள்ள மம்தா பானர்ஜி, இந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் சுமார் 22 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் துன்புறுத்தப்படுகிறார்கள் எஎன்ற பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்த அவர், பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
ஹரியானாவின் குருகிராமில் உள்ள நிர்வாகம் வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று சந்தேகித்து 52 வங்காள புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவர்களின் பின்னணியை விசாரிக்கத் தொடங்கிய சம்பவத்தை அடுத்து மம்தா பானர்ஜி இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். இதனையடுத்து தனது மாநில தொழிலாளர்களை திரும்பி வருமாறு முதலமைச்சர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: ஐரோப்பிய தலைவர்கள் துணையுடன் சென்ற ஜெலன்ஸ்கி!! வெள்ளை மாளிகையில் ட்ரம்புடன் சந்திப்பு!!
இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், “பிற மாநிலங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் உதவியற்றவர்களாகவும், சித்திரவதை செய்யப்பட்டவர்களாகவும், அவர்களின் மொழி காரணமாக குற்றவாளிகளாகவும் முத்திரை குத்தப்படுகிறார்கள். இந்த அனைத்துப் பிரச்சினைகளிலும் நாங்கள் ஒரு முடிவை எடுத்துள்ளோம். வங்காளத்திற்கு வெளியே உள்ள மாநிலங்களில் பணிபுரியும் வங்காள மொழி பேசும் தொழிலாளர்களை மீண்டும் அழைத்து வந்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க ஒரு திட்டத்தை நாங்கள் தயாரித்துள்ளோம். இந்த திட்டத்திற்கு ஸ்ரமஸ்ரீ என்று பெயரிடப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க: தீபாவளி சர்ப்ரைஸ்... GST வரி விதிப்பில் மாற்றம்.. எந்தெந்த பொருட்களுக்கு விலை குறையும்?