ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெட் தேர்வு கட்டாயம் என்று உத்தரவிட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓய்வு பெறும் வயதை அடைய ஐந்து ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுத தேவை இல்லை என்று கூறியுள்ளது. சிறுபான்மை நிறுவனத்தில் டெட் தேர்வை கட்டாயப்படுத்த முடியுமா என்பது குறித்து விசாரிக்க உயர் அமர்வுக்கு வழக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மை நிறுவனங்களில் டெட் கட்டாயப்படுத்தினால் உரிமை பாதிக்குமா என்பதை விசாரிக்க உயர் அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி பெறாதோர் வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது இறுதி சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆசிரியர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியது. இது தங்களுக்கு பாதகமாக அமையும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆசிரியர்கள் கைவிடப்பட மாட்டார்கள் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆதாரும் ஆவணம் தான்! விண்ணப்பியுங்கள்... SIR விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெட் தேர்வு கட்டாயம் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், தீர்ப்பின் விவரம் முழுமையாக கிடைத்தவுடன் அது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்படும் என்று கூறினார். உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக ஆசிரியர் சங்கங்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: சொத்துக்குவிப்பு! சிக்கலில் அமைச்சர் ஐ.பெரியசாமி... உச்சநீதிமன்றம் கொடுத்த ஷாக்..!