கே. அண்ணாமலை, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர், 2021 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்தார். அவரது தலைமையில், பாஜக தமிழ்நாட்டில் தனித்து நின்று தேர்தல் களத்தில் போட்டியிடுவதற்கு முக்கியத்துவம் அளித்தது. அவரது ஆக்ரோஷமான அரசியல் பாணி, திமுக அரசுக்கு எதிரான கடுமையான விமர்சனங்கள், மற்றும் இளைஞர்களை ஈர்க்கும் முயற்சிகள் ஆகியவை பாஜகவின் புலப்படுத்தலை அதிகரித்தன. 2024 மக்களவைத் தேர்தலில் கட்சியின் வாக்கு விழுக்காடு 18%ஐத் தாண்டியது அவரது தலைமையின் முக்கிய சாதனையாகக் கருதப்பட்டது.
இருப்பினும், எந்தவொரு தொகுதியிலும் வெளியிட முடியவில்லை என்பது கட்சிக்கு பின்னடைவாக அமைந்தது.2025 ஏப்ரல் மாதம், அண்ணாமலை தனது மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகினார். இந்த முடிவு, பாஜகவின் மத்திய தலைமையின் உத்தரவின் பேரில் எடுக்கப்பட்டதாகவும், அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைப்பதற்கு வசதியாக இந்த மாற்றம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

அண்ணாமலையின் பதவி விலகலுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுவது, பாஜகவும் அதிமுகவும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் மீண்டும் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை. 2023 ஆம் ஆண்டு, அண்ணாமலை, அதிமுகவின் முன்னாள் தலைவர்களான ஜெ. ஜெயலலிதா மற்றும் சி.என். அண்ணாதுரை ஆகியோரை விமர்சித்தது, இரு கட்சிகளுக்கிடையே பிளவை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: எல்லாம் மகளிருக்காக தான்... ரூ.40 கோடியில் நடமாடும் மருத்துவ ஊர்திகள்... நேரில் பார்வையிட்ட முதல்வர்...!
இதை அடுத்து தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமனம் செய்யப்பட்டார். தற்போது வரை அவர் மாநில பாஜக தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் பதவி என்பது மியூசிக்கல் சேர் போன்றது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விமர்சித்து உள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகு அண்ணாமலைக்கு அரோகரா போட்டது பாஜக தலைமை என்ற தெரிவித்தார். சட்டமன்றத் தேர்தலில் ஏற்படும் தோல்வியால் நயினார் நாகேந்திரனை PACK செய்ய டெல்லி தயாராகும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எல்லோர் மனசுலையும் தாமரை மலரனும்... என்னயா நடக்குது? கோவில் குருக்கள் பேச்சுக்கு கண்டனம்...!