தமிழ்நாடு, தனது உயர்ந்த நகரமயமாக்கல் மற்றும் வளரும் மக்கள்தொகைக்கு இணங்கி, பொது போக்குவரத்தை மாற்றியமைக்கும் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டு, அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் சவால்களுக்கு மத்தியில், மின்சார பேருந்துகள் தமிழ்நாட்டின் நகரங்கள், குறிப்பாக சென்னையில், புதிய உயிரோட்டத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த மாற்றம், ஏழை மக்களின் அன்றாடப் பயணத்தை மட்டுமின்றி, காற்று மாசுபாட்டைக் குறைக்கும் பெரிய இலக்கை நோக்கியும் செல்கிறது.
மின்சார பேருந்துகள், டீசல் பேருந்துகளை விட 30% குறைந்த செலவில் இயங்கி, கார்பன் உமிழ்வை முற்றிலும் தவிர்ப்பதால், இது தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் கொள்கைகளின் மையமாக மாறியுள்ளது. இது மாற்றத்தின் முக்கிய புள்ளியாக பார்க்கப்படுகிறது.

மின்சார பேருந்து இயக்கம் தனியாருக்கு அளிக்கப்பட்டதால் போக்குவரத்து கழகத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அதிமுக குற்றம் சாட்டியிருந்தது. அதிமுகவின் மின்சார பேருந்து இயக்கம் தொடர்பான இந்த குற்றச்சாட்டுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பதிலளித்து பேசினார். அப்போது, மின்சார பேருந்து இயக்குவது தொடர்பாக புரிதல் இல்லாமல் அதிமுக குற்றம் சாட்டுவதாக தெரிவித்தார். அரசியல் காரணங்களுக்காக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் முன்வைப்பதாக கூறினார்.
இதையும் படிங்க: முதல்வருக்கு மறதி நோய்... SIR விவகாரத்தில் தலையிட்ட அண்ணாமலை...!
மின்சார பேருந்தின் விலை அதிகம் என்பதால் அதை தனியார் நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு இயக்கப்படுகிறது என்று தெரிவித்தார். மின்சார பேருந்தை கொள்முதல் செய்த தனியார் நிறுவனத்திடமே பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை கொடுத்துள்ளோம் என்று தெரிவித்தார். மின்சார பேருந்தை பராமரிக்கும் பணியாளர்கள் அரசு போக்குவரத்து கழகத்தில் இல்லை என்றும் அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்தார்.
இதையும் படிங்க: ஓட்டுக்காக மட்டும் வரீங்களே... பாய், போர்வை குடுத்தா போதுமா... மேயரை கேள்விகளால் துளைத்த மக்கள்...!