உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் பங்களிப்புகள் மற்றும் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும், தொழிலாளர்களின் உரிமைகள், வாய்ப்புகளை மேம்படுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் மே ஒன்றாம் தேதியன்று சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் மே தின வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.

உலகினை உழைப்பால் செலுத்தும், உலகினுக்குத் தங்கள் வியர்வையால் உயிரூட்டும் பாட்டாளி வர்க்கத்தினருக்கு தனது உழைப்பாளர் நாள் வாழ்த்துகள். என கூறியுள்ளார். உழைப்பாளர்களின் நலன் காக்கும் நமது முயற்சிகள் தொடரும் என கூறியுள்ள முதலமைச்சர், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம் என்றும் அதற்கு இந்த மே தினம் மேலும் ஊக்கத்தினை வழங்கட்டும் எனவும் கூறினார். இதே போல், மே 1 - உழைக்கும் மக்கள் தம் உரிமைகளை வென்றெடுத்த பொன்னாள் என கூறியுள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உழைப்பால் உலகை இயக்கும் அத்தனை தோழர்களுக்கும் மே தின வாழ்த்துகள் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகை.. புரட்சிகரமான திட்டம்! துணை முதல்வர் உதயநிதி பேச்சு..!

அன்றைக்கு உழைப்பாளிகள் சிந்திய ரத்தத்தின் பலனே இன்றைக்கு உழைப்பாளர்களுக்கு கிடைத்துள்ள உரிமைகள் எனவும் உழைப்பாளர் தினத்தன்று ஊதியத்தோடு விடுமுறை, மே தின பூங்கா, தொழிலாளர் நல வாரியம் என முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் செய்த சாதனைகள் ஏராளம் என்றும் கலைஞர் வழியில் திராவிட மாடல் அரசும் தொழிலாளர் நலன் காக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கட்டிடத்துக்கு வெள்ளை அடிப்பவன் அல்ல; கட்டிடத்தையே இடித்து கட்டுகிறவன்... சீமான் ஆவேசம்!!