சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் மத்திய மாநில உறவுகள் குறித்த கருத்தரங்கை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், மத்திய அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தரும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது., ஆனால் நமக்கான நிதி பகிர்வு மிகவும் குறைவு என்று தெரிவித்தார். குறுகிய அரசியல் நோக்கத்துடன் தமிழ்நாட்டுக்கு குறைந்த அளவிலேயே நிதி பங்கீடு அளிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.
அனைவரும் அனைத்தும் பெற வேண்டும் என சமத்துவம் பேணிய மண் தமிழ்மண் என்று தெரிவித்தார். நான்கரை ஆண்டுகளாக பல நெருக்கடிகளை மீறி சிறப்பான திமுக, ஆட்சியை செய்து வருவதாக கூறினார். எல்லோரும் சமம் என்ற சமத்துவத்தின் அடிப்படையில் கல்வி உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் பெற வேண்டும் என்பதே சமூக நீதி என்றார். சமூக நீதியை சுற்றியே தமிழகத்தின் அரசியல் உள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார். தமிழகத்தில் பொருளாதாரம் வளர்ச்சி தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்றடைவதாக கூறினார்.

இந்திய அளவில் பல துறைகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாகவும் மத்திய அரசு உரிய நிதி பகிர்வை அளிக்காமல் குறுகிய மனதுடன் நடந்து வருவதாகவும் தெரிவித்தார். ஜனநாயக கூட்டாட்சிக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உலகளாவிய சிந்தனையை வலியுறுத்திய தமிழ்மண் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தொண்டர்கள் புடைசூழ முதல்வர் அமைதிப் பேரணி... கலைஞர், அண்ணா நினைவிடங்களில் மரியாதை!
மாநிலங்களின் உரிமை தொடர்ந்து பறிக்கப்படக்கூடாது என்று தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்டோர் சமத்துவம், சமூக நீதி உள்ளிட்ட உயர்ந்த கொள்கைக்காக பாடுபட்டதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னை வெறும் ஊரல்ல... தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!