மோந்தா புயலானது இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில முன்னதாகவே இந்த மோந்தா தீவிர புயலாக வலுபெற்றிருக்கிறது. ஆந்திர பிரதேசம், ஒடிசாவை ஒட்டி இருக்கக்கூடிய மாநிலங்களில் மழை பெய்யும் பொழுது அதித காற்றுடன் கூடிய மழைப்பொழிவு ஏற்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இந்த தீவிர புயலானது வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று மாலை அல்லது இரவுக்குள் காக்கிநாடாவைச் சுற்றி இருக்கக்கூடிய மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே ஆந்திர பிரதேசத்தில் கரையைக் கடக்க வாய்ப்பிருப்பதாக இந்திய வாநிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதற்கு முன்னதாக 90 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிதமிழகத்தைப்லையல், தற்போது தீவிர புயல் கரையை கடக்கும் போது 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டது.

தீவிர புயலாக வலுவடைந்த மோந்தா புயலானது, தொடர்ந்து மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று மாலை அல்லது இரவுக்குள்ளாக கரையைக் கடக்க கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதையும் படிங்க: இதை எக்காரணம் கொண்டும் செய்யாதீங்க... புழல் ஏரியிலிருந்து சீறிப்பாயும் வெள்ளம்... சென்னைக்கு பறந்தது முக்கிய எச்சரிக்கை...!
இதனிடையே மோன்தா புயல் இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கும் போது மணிக்கு 90 - 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திரா கடற்கரையை புயல் நெருங்கி வருகிறது என கூறப்பட்டுள்ளது. இந்த புயலானது 10 கிலோமீட்டர் வேகத்தின் நகர்ந்து வருகிறது என்று குறிப்பிட்டு உள்ளது.
இதையும் படிங்க: முதல்வருக்கு மறதி நோய்... SIR விவகாரத்தில் தலையிட்ட அண்ணாமலை...!