வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

நடிகை மீனாவுக்கு மாநில பொறுப்பு…! நயினார் நாகேந்திரன் பரபரப்பு பிரஸ்மீட்…!

தங்கள் கட்சிக்கு யார் வந்தாலும் இனைத்துக் கொள்வோம் என்று நடிகை மீனாவின் வருகை தொடர்பான கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். 2009 இல் வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார், 2022 இல் அவர் உடல்நலக்குறைவால் இறந்தார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.

சமீபத்தில் மீனா டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து பேசிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். இந்த பதிவில், உங்களை சந்தித்தது மரியாதையாகவும், கௌரவமாகவும் உள்ளது. நிறைய கற்றுக்கொண்டேன், எதிர்காலத்தில் உதவும் என்று குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: மோடி ஆட்சியில் இதெல்லாம் சட்டவிரோதமாக பறிக்கப்படுகிறது.. லிஸ்ட் போட்ட செல்வப்பெருந்தகை..!

இதுவரை மீனா அல்லது அவரது தரப்பில் இருந்து பாஜகவில் இணைவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. குஷ்பு, நமிதா, கங்கனா ரணாவத் போன்ற நடிகைகள் ஏற்கனவே பாஜகவில் இருப்பதால், மீனாவும் இதே பாதையில் செல்வார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

பாஜகவில் நடிகை மீனா இணைய உள்ளதாகவும் அவருக்கு மாநில பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது, ஜெயிக்கப் போகும் கட்சியை நோக்கி சகல விஷயங்களும் வந்து சேரும் என்றும் தங்கள் கட்சிக்கு யார் வந்தாலும் நினைத்துக் கொள்வோம் எனவும் தெரிவித்தார்.  கூட்டணியை உடைக்க நினைத்தால் முடியாது என்ற திட்டவட்டமாக தெரிவித்த நயினார் நாகேந்திரன், எந்த விஷயத்தையும் நாங்கள் பெருசாக ஆக்க நினைக்கவில்லை என்று கூறினார்.

இதையும் படிங்க: ஆணவ அரசியலை அழிப்பது உறுதி.. ஆ.ராசா பேச்சால் கொதித்துப்போன நயினார்..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी