தமிழகச் சட்டமன்றத் தேர்தல் மற்றும் தேசிய அரசியல் சூழல் குறித்துத் தமிழ்நாடு பாஜக பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தேர்தல் முடிவுகள் மற்றும் மத்தியில் அமையவுள்ள ஆட்சி குறித்து அவர் தனது அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
வாக்கு எண்ணிக்கை நெருங்கி வரும் சூழலில், மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆட்சியைப் பிடிக்கும் என்று பியூஷ் கோயல் தெரிவித்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) பெரும்பான்மையான இடங்களைப் பெற்று மீண்டும் ஆட்சியை அமைக்கும்" என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். தேர்தல் முடிவுகள் குறித்துத் தனக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், ஆட்சி அமைப்பதில் ஏதேனும் சந்தேகம் இருந்திருந்தால், டெல்லியில் இருந்து இவ்வளவு தொலைவு நான் வந்திருக்க மாட்டேன் என்று அதிரடியாகத் தெரிவித்தார்.

தேர்தல் களத்தில் தங்கள் கூட்டணி ஒரு குடும்பமாக இணைந்து சிறப்பாகப் பணியாற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நாங்கள் எங்கள் வேலையைச் செய்துள்ளோம். தேர்தலை வெல்வதே எங்கள் பணி; என்டிஏ (NDA) குடும்பமாக நாங்கள் அனைவரும் மிகச் சிறப்பாகப் போட்டியிட்டுள்ளோம்" என்று அவர் கூறினார். கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் களத்தில் வலுவாகச் செயல்பட்டுள்ளன. தாங்கள் எதிர்பார்த்த வாக்குகள் அனைத்தும் தங்களுக்குச் சாதகமாகப் பதிவாகியுள்ளன என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? வெளியான எக்ஸிட் போல் முடிவுகள் - திமுக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறதா?
மத்தியில் நிலையான ஆட்சியை மக்கள் விரும்புவதால், மீண்டும் மோடி தலைமையிலான அரசு அமைவது உறுதி என்பதே அவரது பேட்டியின் சாரமாக அமைந்தது.
இதையும் படிங்க: நெல்லையில் நீடிக்கும் தாமதம்! 22 மணி நேரமாகியும் முழுமையான வாக்கு சதவீதத்தை வெளியிடாமல் தேர்தல் ஆணையம் தாமதம்!