ரத்தம் மனித உடலின் உயிர்நாடியாக விளங்குகிறது. இது உடல் முழுவதும் ஆக்ஸிஜனையும் ஊட்டச்சத்துக்களையும் கொண்டு செல்வதோடு, கழிவுகளை அகற்றுவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
ரத்தத்தின் வகைகள் என்பது மனிதர்களின் ரத்தத்தில் காணப்படும் ஆன்டிஜென்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது.
இந்த வகைப்பாடு மருத்துவத்தில் மிக முக்கியமானது, குறிப்பாக ரத்தமாற்றம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில். ரத்த வகைகளைப் புரிந்து கொள்ள, முதலில் ரத்தத்தின் கூறுகள் மற்றும் அதன் வகைப்பாட்டு அமைப்புகளைப் பற்றி அறிய வேண்டும்.
இதையும் படிங்க: மக்களே உஷார்... 3வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
ரத்தம் முதன்மையாக சிவப்பு ரத்த அணுக்கள், வெள்ளை ரத்த அணுக்கள், பிளேட்லெட்டுகள் மற்றும் பிளாஸ்மா ஆகியவற்றால் ஆனது. இவற்றில் சிவப்பு ரத்த அணுக்களின் மேற்பரப்பில் காணப்படும் ஆன்டிஜென்கள் ரத்த வகைகளைத் தீர்மானிக்கின்றன.

ABO அமைப்பு ரத்த வகைகளை A, B, AB மற்றும் O என நான்கு முக்கிய குழுக்களாகப் பிரிக்கிறது. L இந்த நிலையில் கர்நாடகாவில் ஒரு பெண்ணுக்கு புதிய வகை ரத்த வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ரத்தம் வினை புரியும் வகையில் இருக்காது எனக் கூறப்படும் நிலையில், இந்தப் பெண்ணின் ரத்த வகை வினைபுறியும் வகையில் இருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் இதை அறுவை சிகிச்சைக்காக சென்றபோது ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு ORH POSSITIVE என்ற ரத்த வகை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தப் பெண்ணின் ரத்த மாதிரி இங்கிலாந்தில் உள்ள சர்வதேச ரத்த வகை கண்டறியும் பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பத்து மாதங்களாக நடைபெற்று வந்த சோதனையில் அந்த பெண்ணுக்கு புதிய வகை ரத்த மாதிரி கண்டறியப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ED-யிடம் சிக்கிய காங். எம்எல்ஏ கே.ஒய். நஞ்சேகவுடா.. ரூ.1.32 கோடி சொத்துக்கள் பறிமுதல்..!