உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த அனுராக்கிற்கும், மதுவுக்கும் கடந்த 25ஆம் தேதி கல்யாணம் நடந்துள்ளது. அனுராக் வணிக கடற்படை அதிகாரியாக உள்ளார். கல்யாணமாகி இரண்டு மாதம் புகுந்த வீட்டில் மகிழ்ச்சியாக இருந்த மதுவுக்கு அதுக்கப்புறம் தான் பிரச்சனையே ஸ்டார்ட் ஆகி இருக்கு. மதுவோட குடும்பம் எந்த வசதி வாய்ப்புக்கும் பஞ்சமில்லாத வசதியான குடும்பம்.
கல்யாணத்தின் போதே மகளுக்கு நகை, பணம் என சீர்வரிசையை அள்ளி கொடுத்துள்ளனர். ஆனால் கல்யாணம் முடிந்த சில மாதங்களுக்கு பிறகு உங்க வீட்டில் இருந்து கொஞ்சம் நகையும், 15 லட்சம் ரூபாய் பணமும் வாங்கிட்டு வான்னு அனுராக்கும் அவருடைய குடும்பமும் சேர்ந்து மதுவை படாத பாடு படுத்தி இருக்காங்க.
எங்க வீட்ல எனக்கு கொடுக்க வேண்டியதெல்லாம் கொடுத்துட்டாங்க. மறுபடியும் என்னால அவங்க கிட்ட பணம் நகை எல்லாம் கேட்க முடியாதுன்னு மது சொன்னதும் கணவன் அனுராக் அவருடைய உண்மையான முகத்தை காட்ட ஆரம்பித்துள்ளார். தினமும் அவரை கொடூரமான முறையில் அடித்து சித்திரவதை செய்துள்ளார். ஒருகட்டத்திற்கு மேல், பாலியல் ரீதியிலான துன்புறுத்த ஆரம்பித்த அனுராக், மதுவுக்கு வலுக்கட்டாயமாக வாயில் மதுவை ஊற்றி விடுவது, ஆபாச படத்தை காண்பித்து அதில் இருப்பது போல் உறவு கொள்ள கட்டாயப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனால் நரக வேதனை அடைந்த மது, இந்த கொடுமைகளைப் பற்றி தனது தாய், தந்தையிடம் வாய் திறக்கவில்லை என்றாலும் அவ்வப்போது அவருடைய சித்தி மகளான ப்ரியாவிடம் போனில் சொல்லி அழுதுள்ளார். அத்துடன் எக்காரணம் கொண்டு இந்த விஷயங்களை தனது பெற்றோரிடம் சொல்ல வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார். தினமும் ப்ரியாவிடம் மது போன் பேசிய வந்ததால் ஆத்திரமடைந்த அனுராக், “நீங்க ரெண்டு பேரும் என்ன லெஸ்பியனா?” என்றெல்லாம் கேட்டு சித்திரவதை செய்துள்ளார்.
இதையும் படிங்க: 100 சவரன் நகைகள், சொகுசு கார் கொடுத்தும் போதல... திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம்...!
பாலியல் டார்ச்சர், வரதட்சனை கேட்டு சித்திரவதை, சந்தேகம் என ஒரு பொண்ணை எப்படிய எல்லாம் டார்ச்சர் பண்ணக்கூடாதோ அப்படிய எல்லாம் டார்ச்சர் பண்ணி தாலி கட்டுன மனைவியை அடிச்சு கொடுமைப்படுத்தி சைக்கோ மாதிரி நடந்திருக்காரு. கடந்த நான்காம் தேதி காலையில தன்னோட தங்கச்சி பிரியாவுக்கு போன் பண்ண மது “சீக்கிரம் வீட்டுக்கு வா இல்லன்னா. அவன் என்னைய கொலை பண்ணிடுவான்னு” சொல்லிட்டு இருக்கும்போது, போன் கட் ஆகியுள்ளது.
பிரியாவும் வழக்கம் போல சண்டையா இருக்கும்னு சொல்லி அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அதுக்கு மறுநாள் காலையில் மது தூக்கு போட்டு தற்கொலை செய்தி கொண்டதாக ப்ரியாவுக்கு தகவல் தெரியவந்துள்ளது. அக்கா மரணமடைந்த தகவலை கேட்டதும் ஓடி வந்த பிரியா நடந்த விஷயங்கள் அனைத்தையும் போலீஸ்ல கம்ப்ளைண்டா சொல்லி இருக்காங்க. அதே நேரம் மது தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், அவளை அனுராக் தான் அடிச்சு கொன்னுருக்கான்னு சொல்லி இருக்காங்க.
அதுக்கு பிறகு வழக்கு பதிவு செஞ்ச போலீஸ் மதுவுடைய உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.தற்போது அனுராகிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார், பிரேதபரிசோதனை அறிக்கை வந்த பிறகே முழு விவரங்கள் தெரிய வரும் என சொல்லியிருக்காங்க.
இதையும் படிங்க: "உன்ன நான் பாத்துக்குறேன்... " புகார் கொடுக்க வந்த பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த எஸ்.ஐ...!