ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கிடையில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸின் பேச்சு பரபரப்பை கிளப்பி உள்ளது. பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களை எந்த விலையிலும் விட்டுவிட மாட்டேன் என்று வான்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார். பாகிஸ்தானுடன் முழு அளவிலான போரைத் தவிர்க்குமாறு இந்தியாவிடம் அவர் கேட்டதற்கு இதுவே காரணம்.

பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி.வான்ஸ் ஒரு திட்டத்தை வகுத்துள்ளார். பஹல்காம் தாக்குதல் குறித்துப் பேசிய அவர், இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நேரடிப் போர் இருக்கக்கூடாது என்பதை தெளிவுபடுத்தினார். அமெரிக்காவைத் தவிர, பல நாடுகளும் எந்த சூழ்நிலையிலும் இரு நாடுகளுக்கும் இடையே போர் இருக்கக்கூடாது என்று விரும்புகின்றன.
பாகிஸ்தான்,இ ந்தியாவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று வான்ஸ் கூறினார். அத்தோடு, பாகிஸ்தானுக்குள் இருக்கும் பஹல்காமின் பயங்கரவாதிகளை இந்தியா கண்டுபிடித்து ஒழிக்க வேண்டும் என்று அவர் தெளிவாகக் கூறினார். இந்த நடவடிக்கை பின்லாடனைக் கொல்வதை விட பாகிஸ்தானுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

இதையும் படிங்க: இந்தியாவிற்குள் 'ஆப்பிள்' நிறுவனத்தை தடுக்கவே பஹல்காம் தாக்குதல்... பாகிஸ்தானை ஏவிய சீனா..!
ஜே.டி.வான்ஸின் இந்த பேச்சின் பொருள், சாத்தியமான திட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது.
1. இந்தியாவின் சிறப்புப் படைகள் அமெரிக்காவைப் போல ஒரு நடவடிக்கையை மேற்கொள்ளும் திறனை கொண்டுள்ளன. அதாவது, எல்லையைத் தாண்டி ஒரு சிறப்புக் குழு மூலம் உயர் இலக்குகளைக் கொல்லும் திறன் கொண்டவை. இந்த நடவடிக்கையை பாகிஸ்தானுக்குத் தெரியாமல் கூட இந்தியாவால் செய்ய முடியும்.
2. பயங்கரவாதிகளை ஒழிக்க இஸ்ரேல், அமெரிக்காவைப் போல இந்தியாவும் புத்திசாலித்தனமான ட்ரோன் தாக்குதல்களை நடத்த வேண்டும். இந்திய அரசு இதற்கு நேரடியாகப் பொறுப்பேற்கிறதா? அது ஒரு ரகசிய நடவடிக்கையா? என்பது அதன் செயல்பாட்டை பொறுத்தது.

3. அந்த பயங்கரவாதிகளை ஒழிக்க, இந்தியா உள்ளூர் நெட்வொர்க்குகளை, பாகிஸ்தானுக்குள் இருக்கும் பயங்கரவாத எதிர்ப்பாளர்களை வைத்து செயல்படுத்த வேண்டும். தரைவழி சண்டையிலிருந்து விலகி மறைமுக வழிகள் வழியாக இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.
4. இஸ்ரேல் செய்தது போல் நவீன கண்காணிப்பு, சமூக ஊடகங்கள், அழைப்பு இடைமறிப்புகள் மூலம் பயங்கரவாதிகளின் நேரடி இருப்பிடத்தைக் கண்டறிந்து உயர் துல்லியமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
.
5. ஒரு பக்கம் சர்வதேச அழுத்தம், மறுபுறம் அமைதியாக சர்ஜிக்கல் ஸ்டிரைக், எந்த ஆதாரத்தையும் விட்டு வைக்க வேண்டாம். ஆனால், தாக்கம் மிகப்பெரியதாக இருக்க வேண்டும் என பல நாடுகளும் எதிர்பார்க்கின்றன.
இதையும் படிங்க: பாகிஸ்தானுடன் அனுசரிச்சு போகணும்.. இந்தியாவுக்கு நெருக்கடி.. டீலை முடித்த அமெரிக்கா..!