காஷ்மீரில் கடந்த மாதம் 22-ந்தேதி பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, பாகிஸ்தானியருக்கான விசா ரத்து, அட்டாரி எல்லை மூடல், பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றம் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதனிடையே, நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தால் இந்தியா போரை எதிர்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் பகிரங்கமாக பேசி இருந்தது. இந்த தீவிரவாத தாக்குதலை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்..! புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீட்டில் தீவிர சோதனை..!

இந்நிலையில், இந்திய ராணுவ வாகனங்களுக்கான இணையதளம் மீது பாகிஸ்தான் சைபர் தாக்குதல் நடத்தி உள்ளது. பாரிக்கர் பாதுகாப்பு கல்வி நிறுவனத்தின் இணையதளத்தையும் பாகிஸ்தான் ஹேக் செய்துள்ளது. சைபர் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக ஆய்வு நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொடூரமான பதிலடி கொடுப்போம்..! பழி தீர்க்காமல் இந்தியா ஓயாது..! பிரதமர் மோடி சூளுரை..!