ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி 26 பேரை பலி வாங்கிய பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’னு ஒரு மாஸ் ஆக்ஷனை மே 7-ல் நடத்தியது. இந்த தாக்குதல்ல பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) மற்றும் பாகிஸ்தானில் இருந்த ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவற்றின் ஒன்பது பயங்கரவாத முகாம்களை தவிடு பொடியாக்கி, 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை இந்திய விமானப்படை கொன்று குவிச்சது. ஆனா, இந்த தாக்குதல் முடிஞ்சு 90 நாள் கூட ஆகல, பாகிஸ்தான் மறுபடியும் பழையபடி பயங்கரவாத சதி வலையை பின்ன ஆரம்பிச்சிடுச்சுனு நம்ம உளவுத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கு
பாகிஸ்தானோட உளவு அமைப்பான ISI, இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களை தூண்டி விடுறதுக்கு மறுபடியும் 15-க்கும் மேற்பட்ட பயங்கரவாத முகாம்களையும், ஏவுதளங்களையும் PoK-ல கட்டி எழுப்பியிருக்கு. கேல், ஷார்டி, துத்நியல், ஆத்முகாம், ஜூரா, லிபா பள்ளத்தாக்கு, தந்தபாணி, நய்யாலி, ஜான்கோட், சகோதி உள்ளிட்ட இடங்களில் இந்த முகாம்கள் திரும்பவும் உருவாகியிருக்கு.
இதோட, ஜம்மு எல்லையில் மஸ்ரூர், சாப்ரார், ஷகர்கர் இடங்களில் நான்கு ஏவுதளங்களும், ஒரு ட்ரோன் மையமும் அமைக்கப்பட்டிருக்கு. இந்த முகாம்களை முன்பு போல பெரிசா வைக்காம, சின்ன சின்ன முகாம்களா பிரிச்சு, காட்டுப் பகுதிகளில் அமைச்சு, இந்தியாவோட கண்காணிப்பையும், தாக்குதலையும் தவிர்க்க பாகிஸ்தான் திட்டமிடுது.
இதையும் படிங்க: 'ஆப்ரேஷன் அகல்' காஷ்மீரில் இந்திய ராணுவ தீவிர வேட்டை.. பயங்கரவாதியை துளைத்தது தோட்டா!!

இதுக்கு மேல, பயங்கரவாதிகள் இப்போ புது உத்தியையும் கையாள ஆரம்பிச்சிருக்காங்க. முன்பு ஒரு முகாமில் 5 மடங்கு பயங்கரவாதிகள் இருந்தாங்க, ஆனா இப்போ பெண்கள், குழந்தைகளை மனிதக் கேடயங்களா பயன்படுத்த ஆரம்பிச்சிருக்காங்க. இந்த மறு கட்டமைப்புக்கு ISI சுமார் 100 கோடி பாகிஸ்தான் ரூபாய் செலவு பண்ணியிருக்குனு உளவுத் தகவல்கள் சொல்லுது.
ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன், தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட் (TRF) ஆகியவற்றோட முக்கிய தளபதிகளும், ISI உயர் அதிகாரிகளும் பஹவல்பூரில் சமீபத்துல ஒரு முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருக்காங்க. இந்தக் கூட்டத்துல, பயங்கரவாத முகாம்களை மறு கட்டமைப்பு செய்யவும், புது ஆயுதங்கள் வாங்கவும், பயங்கரவாதிகளை திரும்பவும் ஆள் சேர்க்கவும் திட்டம் வகுத்திருக்காங்க.
இந்திய உளவுத்துறை இந்த சதி வலையை கண்டுபிடிச்சு, இந்த முகாம்கள் எல்லாம் மறுபடியும் இந்தியாவுக்கு அச்சுறுத்தலா இருக்குனு எச்சரிச்சிருக்கு. குறிப்பா, TRF-ஆல் நடத்தப்பட்ட பஹல்காம் தாக்குதல், இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானோட தொடர்ச்சியான ஆதரவை காட்டுது. இந்த முகாம்களுக்கு பாகிஸ்தான் ராணுவமும், அரசு அமைப்புகளும் முழு ஆதரவு கொடுக்குறது, இந்தியாவுக்கு பெரிய சவாலா இருக்கு.
இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் மூலமா பயங்கரவாத முகாம்களை அழிச்சு, “இனி எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு கடுமையான பதிலடி கொடுப்போம்”னு பாகிஸ்தானுக்கு தெளிவா மெசேஜ் அனுப்பியிருக்கு. ஆனா, பாகிஸ்தான் இன்னும் பழைய பாதையிலேயே பயணிக்குது.
இந்த புது முகாம்கள், ட்ரோன் மையங்கள், பயங்கரவாதிகளோட மறு ஒருங்கிணைப்பு எல்லாம் இந்தியாவுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலா இருக்கு. இதுக்கு இந்தியா எப்படி பதிலடி கொடுக்கப் போகுது, இனி வர்ற நாட்கள்ல பாகிஸ்தானோட இந்த சதி வலை என்ன ஆகப் போகுதுனு பார்க்க வேண்டியிருக்கு..
இதையும் படிங்க: பார்லி.,-யில் ஒலித்த பாரத் மாதா கீ ஜெய்!! பிரதமர் மோடிக்கு மாலை மரியாதை!! அசத்திய தேஜ கூட்டணி!