உடுப்பி: ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும், ஜனசேனா தலைவருமான பவன் கல்யாண், கர்நாடகாவின் பிரபலமான உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் தரிசனம் செய்தார்.
அதன் பிறகு கோயில் வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், இந்து சமூகத்தை ஒருங்கிணைக்கும் வகையில் உணர்ச்சிகரமான உரையாற்றினார். “இந்துக்கள் முதலில் தங்கள் மதத்தைப் பாதுகாக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். யாரும் நம்மைத் தாக்கத் துணியாதபடி குரல் எழுப்ப வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.
“சனாதன தர்மம் குருட்டு நம்பிக்கை இல்லை… அது மனிதகுலத்திற்கு அறிவியல் ஞானப் பாதை. மற்றவர்கள் நம் தர்மத்தைத் தாக்குகிறார்கள் என்று புலம்புவதற்கு முன், அதைப் பாதுகாக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: மசோதாக்களை நிறுத்தி வச்சேனா? உண்மை என்னானு தெரியுமா? கவர்னர் - முதல்வர் சந்திப்பில் நடந்தவை என்ன?
தமிழ்நாட்டில் கூட இந்துக்கள் தங்கள் உரிமைகளுக்காக சட்டப் போராட்டம் நடத்த வேண்டிய நிலை இருக்கிறது. இனி இப்படி நடக்காமல் இருக்க ஒவ்வொரு இந்துவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என்று பவன் கல்யாண் தெரிவித்தார்.

இந்திய அரசியலமைப்பு முகப்புப் பக்கத்தில் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்யும் படம் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், “அது வெறும் அலங்காரம் இல்லை. அரசியலமைப்பின் மதிப்புகள் (சமூக நீதி, சமத்துவம், நலன், தர்மம்) கீதையின் சாரத்தில் இருந்து வருகின்றன. சனாதன தர்மமும் அரசியலமைப்பும் ஒரே இலக்கை நோக்கிச் செல்கின்றன” என்று பேசினார்.
உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் நடந்த இந்த நிகழ்ச்சி, பவன் கல்யாணின் இந்து ஒருங்கிணைப்பு முயற்சியின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் திமுக அரசு இந்து உரிமைகளைப் பறிப்பதாகக் கூறி வரும் பாஜக-வின் கருத்தை மறைமுகமாக ஆதரிக்கும் வகையில் அவரது பேச்சு அமைந்துள்ளது. பவன் கல்யாணின் இந்த உரை சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: இந்தியாவை பாகிஸ்தானுடன் ஒப்பிடாதீங்க!! எங்களுக்கு விதிகள், நெறிமுறைகள் இருக்கு! ஜெய்சங்கர் ஆவேசம்!