சண்டையை நிறுத்தும் உடன்படிக்கையை மீறி மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது பாகிஸ்தான். ஒப்பந்தம் ஒப்புக்கொள்ளப்பட்ட 3 மணி நேரத்தில் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு இடங்களில் பீரங்கி குண்டுகள் சத்தம் கேட்பதாகவும், ட்ரோன்கள் தென்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. அது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, போர் நிறுத்த உடன்படிக்கையை பாகிஸ்தான் மீறிய நிலையில், பிரதமர் மோடி பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதால் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 2 நாட்களுக்கு முன்பு நிறுத்தியிருந்தால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கும்.. காஷ்மீர் முதல்வர் வருத்தம்..!
இதையும் படிங்க: #BREAKING: போர் நிறுத்தம் எதிரொலி..! முப்படை தளபதிகள் அவசர ஆலோசனை..!