புதுடில்லி: இத்தாலியின் போருக்குப் பிந்தைய வரலாற்றில் நீண்ட காலம் தொடர்ந்து பிரதமராகப் பணியாற்றியவர் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ள ஜார்ஜியா மெலோனிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மெலோனியை தனது நண்பர் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, இந்தியா–இத்தாலி உறவை மேலும் வலுப்படுத்த தொடர்ந்து இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக நெருக்கமான நட்பு இருந்து வருகிறது. சர்வதேச மாநாடுகள் மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் முக்கிய நிகழ்ச்சிகளில் இருவரும் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். குறிப்பாக ஜி7 மாநாடு உள்ளிட்ட சர்வதேச நிகழ்வுகளில் இருவரது சந்திப்புகளும் கவனம் பெறுவது வழக்கம்.
இந்த நிலையில், மெலோனி இத்தாலியின் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் நீண்ட காலம் தொடர்ந்து பிரதமராகப் பணியாற்றியவர் என்ற சாதனையை பெற்றுள்ளார். இதையடுத்து செப்டம்பர் 4-ம் தேதி பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பதிவில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாள்! பாஜக மெகா பிளான்! வாட்நகரில் இருந்து வாரணாசி வரை அடுத்தகட்ட திட்டம்!

மெலோனியின் இந்த சாதனை, அவர் மீது இத்தாலி மக்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் ஆதரவையும் வெளிப்படுத்துவதாக மோடி குறிப்பிட்டுள்ளார். அவரது தலைமைக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் முக்கியமான மைல்கல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இத்தாலி இடையிலான உறவுகளை மேம்படுத்துவதில் மெலோனியின் நட்பு முக்கிய பங்கு வகித்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இரு நாடுகளின் மக்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க தொடர்ந்து இணைந்து செயல்படுவதற்கான ஆர்வத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், மெலோனி எதிர்காலத்திலும் தொடர்ந்து வெற்றிகளை பெற வேண்டும் என பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இரு தலைவர்களுக்கும் இடையிலான நட்பு ஏற்கனவே சர்வதேச அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ள நிலையில், தற்போதைய வாழ்த்து பதிவும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
இந்தியா–இத்தாலி உறவை வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேலும் விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இரு தலைவர்களின் தனிப்பட்ட நல்லுறவும் இருநாட்டு உறவுகளுக்கு சாதகமான சூழலை உருவாக்குவதாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பயங்கரவாதத்தில் இரட்டை நிலைப்பாடு கூடாது! பாக்., பிரதமர் முன்பு அதிரடி காட்டிய மோடி! கவனத்தை ஈர்த்த உரை!