பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து பாகிஸ்தான், இந்திய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவியது. பாகிஸ்தானின் ஒவ்வொரு அத்துமீறலுக்கும் இந்தியா பதிலடி கொடுத்து வந்தது. இந்தியாவின் தாக்குதலால் பெரும் இழப்புகளை சந்தித்து வந்த பாகிஸ்தான் போர்க்களத்தை தணிக்க கோரிக்கை விடுத்தது.

இதனை எடுத்து இரு நாடுகளுக்கும் இடையே நேரடி பேச்சு வார்த்தை நடைபெற்ற நிலையில் போர் நிறுத்தம் ஏற்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணி உடன் அனைத்து விதமான தாக்குதல்களும் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இதையும் படிங்க: 2 நாட்களுக்கு முன்பு நிறுத்தியிருந்தால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கும்.. காஷ்மீர் முதல்வர் வருத்தம்..!

டெல்லியில் முப்படை தளபதிகள், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி ஆலோசித்து வருகிறார். பிரதமருடனான ஆலோசனையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதையும் படிங்க: பதற்றம் ஓய்ந்தது..! மீண்டும் வான் பறப்பை திறந்த பாகிஸ்தான்..!